Créditos
PERFORMING ARTISTS
T. M. Soundararajan
Performer
COMPOSITION & LYRICS
M. S. Viswanathan
Composer
Pulamaipithan
Songwriter
Letras
நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்
நேர்மை திறமிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்
நேர்மை திறமிருந்தால்
உழைப்போர் அனைவரும் ஒன்று
எனும் உணர்வினில் வளர்வது இன்று
உழைப்போர் அனைவரும் ஒன்று
எனும் உணர்வினில் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
இனி ஒரு நாளும் நடக்காது
இனி ஒரு நாளும் நடக்காது
நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
நெஞ்சில் துணிவிருந்தால்
பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா
சில பாவிகள் ஆணவம்
பஞ்சையின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா
பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா
சில பாவிகள் ஆணவம்
பஞ்சையின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா
மாறினால் மாறட்டும்
இல்லையேல் மாற்றுவோம்
தீமைகள் யாவையும்
கூண்டிலே ஏற்றுவோம்
நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
நெஞ்சில் துணிவிருந்தால்
நீதியின் தீபங்கள்
ஏந்திய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை
எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
நீதியின் தீபங்கள்
ஏந்திய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை
எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில்
வெற்றியே காணலாம்
அண்ணனின் பாதையில்
வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய்
நாளெல்லாம் காக்கலாம்
Written by: M. S. Viswanathan, Pulamaipithan