album cover
Sollamathan
4259
Indian Folk
Sollamathan fue publicado el 12 de enero de 2021 por Divo Tv Private Limited como parte del álbum Pulikkuthi Pandi (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Fecha de lanzamiento12 de enero de 2021
SelloDivo Tv Private Limited
Melodicidad
Acústico
Valence
Bailabilidad
Energía
BPM75

Créditos

PERFORMING ARTISTS
Mohan Raj
Mohan Raj
Performer
N.R. Raghunanthan
N.R. Raghunanthan
Performer
Srinisha
Srinisha
Vocals
COMPOSITION & LYRICS
N.R. Raghunanthan
N.R. Raghunanthan
Composer

Letras

சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம
என் கண்ணு ரெண்ட ஆக்கிபுட்ட தூக்கம் இல்லாம
Hey காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம
அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம
சும்மா சும்மா கண்ணாடிய பாக்க வெச்சானே
பத்து முறை பவுடர் அள்ளி பூச வெச்சானே
வித விதமா வெக்கப்பட கத்து தந்தானே
ரக ரகமா கனவுலதான் முத்தம் தந்தானே
Hey பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே
அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்த விட்டானே

அவன் போட்ட சட்டை இருக்கு
நான் போட்டு பாக்க ஆசை வந்துச்சு
என் முந்தானையில் அவன் மொகத்த
நான் தொட்டு பாக்க போதை வந்துச்சு
கையும் காலும் தான் ரெக்க ஆணுச்சு
வானம் தாண்டி தான் போக தோனுச்சு
கையும் காலும் தான் ரெக்க ஆணுச்சு
வானம் தாண்டி தான் போக தோனுச்சு
அரணா கொடியாட்டம்
அவன சுத்தி கெடப்பானே
அரை நொடி பிரிஞ்சாலும்
நான் பித்து பிடிப்பேனே
அவன் கால் அழக பார்த்து பார்த்துதான்
வைகை நதிக்கரைய கட்டி வெச்சாங்க
அவன் தோள் அழக பார்த்த பின்னாலே
வருஷ நாட்டு மலை சின்னதுனாங்க
ஹையோ பயபுள்ள செக்க செவப்புடா
கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா
ஹையோ பயபுள்ள செக்க செவப்புடா
கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா
அழகர் தேராட்டாம்
அவன் நடையும் இருக்கும்டா
ஆயுள் முழுக்க நான்
அவன் நிழல்லா நடப்பேன்டா
சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம
என் கண்ணு ரெண்ட ஆக்கிபுட்ட தூக்கம் இல்லாம
Hey காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம
அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம
சும்மா சும்மா கண்ணாடிய பாக்க வெச்சானே
பத்து முறை பவுடர் அள்ளி பூச வெச்சானே
வித விதமா வெக்கப்பட கத்து தந்தானே
ரக ரகமா கனவுலதான் முத்தம் தந்தானே
Hey பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே
அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்த விட்டானே
Hey பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே
அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்த விட்டானே
Written by: Mohan Rajan, N.R. Raghunanthan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...