Créditos
PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
Performer
Bombay Vikram
Actor
Latha
Actor
COMPOSITION & LYRICS
G. K. Venkatesh
Composer
Kannadasan
Lyrics
Letras
ஆ
அ-அ-ஆ
அ-ஆ-அ
அ-அ-அ-ஆ
அ-அ-ஆ-ஆ
நவரசம் பிறந்த இடம்
நான்கு குணம் வளர்ந்த இடம்
சுகங்கள் எல்லாம் நிறைந்த இடம்
எந்நாளும் பெண்ணிடமே
காதல் ஒரு கோயில் போலே
தெய்வங்கள் பெண்கள்
காதல் ஒரு கோயில் போலே
தெய்வங்கள் பெண்கள்
கல்யாண மோகம் கொண்ட
பொம்மைகள் ஆண்கள்
கல்யாண மோகம் கொண்ட
பொம்மைகள் ஆண்கள்
காதல் ஒரு கோயில் போலே
தெய்வங்கள் பெண்கள்
(கல்யாண மோகம் கொண்ட)
(பொம்மைகள் ஆண்கள்)
(காதல் ஒரு கோயில் போலே)
(தெய்வங்கள் பெண்கள்)
ஆசையெனும் சோலையிலே
ஆடுகின்ற பொன் வண்டு
ஆண் என்று அவன் படைத்தான்
வண்டெனவே குணம் படைத்தான்
காதல் ஒரு காவியம் என்றார்கள்
எந்நாளும் கற்பனை செய்வார்கள்
கண்ணாலே கவிதையும் சொல்வார்கள்
காலத்தால் யாவையும் மறப்பார்கள்
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
வானம் ஒரு வில்லை கண்டால்
வர்ணங்கள் ஆண்கள்
மாறாத எண்ணம் கொண்ட
தீபங்கள் பெண்கள்
(மாறாத எண்ணம் கொண்ட)
(தீபங்கள் பெண்கள்)
காதல் ஒரு கோயில் போலே
தெய்வங்கள் பெண்கள்
ஆ-ஆ-அ-அ
ஆ-அ-அ-அ-அ
ஹை-ஹா-ஹான்
என்ன காதல் என்ன எண்ணம்-ஹ-ஹா
என்ன காதல் என்ன எண்ணம்
உங்கள் எண்ணங்கள் (ஹைய்-ஹைய்)
இன்று நாளை மாறிப்போகும்
ஆசை கிண்ணங்கள்-ஹான்-ஹா
நஞ்சு விழி என்றதனால்
நீல விழி என்றார்
வஞ்சகமே செய்வதனால்
வஞ்சியர்கள் என்றார்
உன் உள்ளம் ஒன்று எண்ணம் ரெண்டு
சொல்லும் சொல் என்ன?
ஹோ உங்கள் பேரை தெய்வம் என்றால்
எங்கள் பேர் என்ன?
(ஹோ உங்கள் பேரை தெய்வம் என்றால்)
(எங்கள் பேர் என்ன?)
உன் உள்ளம் ஒன்று எண்ணம் ரெண்டு
சொல்லும் சொல் என்ன?
(உன் உள்ளம் ஒன்று எண்ணம் ரெண்டு)
(சொல்லும் சொல் என்ன?)
(ஹோ உங்கள் பேரை தெய்வம் என்றால்)
(எங்கள் பேர் என்ன?)
உன் உள்ளம் ஒன்று எண்ணம் ரெண்டு
சொல்லும் சொல் என்ன?
ஹான்-ஹான்
Written by: G. K. Venkatesh, Kannadasan

