album cover
Mudhalvanae
album cover
00:00
03:45
04:20
04:25
04:30
04:45
06:00
00:00
06:40
Últimos 7 días
Mudhalvanae se descubrió con más frecuencia alrededor de 4 minutos and 30 segundos después la canción durante la última semana

Letra

முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே
முதல்வனே என்னை கண் பாராய்
முந்தானை கொடியேற்ற நேரமில்லையா
ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
முத்த நிவாரணம் எனக்கில்லையா
வாளின் ஓசை கேட்கும் தலைவா
வளையல் ஓசை கேட்கவில்லையா
முதல்வா
முதல்வா (முதல்வா)
முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே
ஆ-ஆ
கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி
குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில் (ஆ-ஆ)
பீலி ஒன்றை எடுத்து தேனில் நனைத்து
கையொப்பம் இடுவேன் உந்தன் மார்பில்
உலகம் வாழ நிதி ஒதுக்கு
என் உயிரும் வாழ மதி ஒதுக்கு
அரசன் வாழ விதி இருக்கு
அதற்கு நீ தான் விதி விலக்கு
மன்னனே
மன்னனே
இதோ இவள் உனக்கு
முதல்-வா-வா, முதல்வா
முதல்-வா-வா, முதல்வா
முதல்-வா-வா, முதல்வா
முதல்வா முதல்வா
ஆ-ஏ-ஓ-ஆ
ஆ-ஏ-ஓ-ஆ
முதல்வா
முதல்வா (ஏ-ஏய்)
பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய்
பள்ளியறை வர நேரமில்லையோ
ஓ ஊரடங்கு தளர்த்தி வரிகள் தளர்த்தி
உடைகள் தளர்த்திட வேண்டும் இல்லையா
ஆசை பூவை தவிக்கவிட்டு
அமைச்சரோடு நகர்வலமோ
உனது கண்ணில் நீர் துடைத்தால்
ஊர் குழாயில் நீர் வருமோ
வேந்தனே
வேந்தனே
உந்தன் வரம் வருமோ
முதல்வனே என்னை கண் பாராய்
முந்தானை கொடியேற்ற நேரமில்லையா
ஹே-ஏ காதல் பஞ்சம் வந்து (நொந்தாயோ)
முத்த நிவாரணம் (உனக்களிப்பான்)
வாளின் ஓசை (தீரும் போது)
வளையல் ஓசை (கேட்க வருவான்)
முதல்வா முதல்வா
முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...