Video musical

Video musical

Créditos

ARTISTAS INTÉRPRETES
Kabilan
Kabilan
Intérprete
Shreya Ghoshal
Shreya Ghoshal
Canto
Palakad Sreeram
Palakad Sreeram
Canto
Mahesh Vinayakram
Mahesh Vinayakram
Canto
Karthi
Karthi
Actuación
COMPOSICIÓN Y LETRA
A. R. Rahman
A. R. Rahman
Composición
Kabilan
Kabilan
Letra
PRODUCCIÓN E INGENIERÍA
A. R. Rahman
A. R. Rahman
Producción

Letra

மொத்தத்தில சித்தத்தில தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்
மொத்தத்தில சித்தத்தில தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்
ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி தேரா புத்தி தான் ஓஹோ
ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி தேரா புத்தி தான்
ஓ வீரன் வீரன் வீரன் வீரன் எங்க மாமன் வீரன்
ஆலமர வேரை போல ஆழமான தீரன்
ஆக்கம் காண வைக்க போறான் ஆட்டுக்குட்டி பேரன்
நாட்டு தலைவன் நோட்டம் கொள்வதா-ஓ-ஹோ
ஓ மீசை வச்ச மிருக மிருகனே
மொத்தத்தில சித்தத்தில தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்
துவம்சவிதம் துவம்சவிதம் இம்சை மொழி
அம்சமென அம்சமென வம்சவழி
வந்தரசன் வந்தரசன் கம்சமுகன் நான்
உக்கிரனின் உக்கிரனின் புத்திரனே
நித்தமுடன் நித்தமுடன் சத்தியனே
முத்துநிகர் முத்துநிகர் ஒத்தை மகன் நான்
பாலகனே பாலகனே பாலகனே பாலகனே
அண்டங்களின் அண்டங்களின் துண்டுகளை
கண்டங்களை கண்டங்களை வென்றெடுத்து
கொண்ட ஒரு கொண்ட ஒரு கோமகன் நான்
என் நிகராய் என் நிகராய் விண்ணுலகில்
மண்ணுலகில் மண்ணுலகில் தந்திரனாய்
மந்திரனாய் மந்திரனாய் வந்தவனோ யார்?
கத்தும் கடல் கத்தும் கடல் எட்டுத் தொட
சூரியனை சூரியனை பொட்டு இட
வட மதுரை வலம் வருவேன் நான்
ஹோ-ஓ-எண்ணம் இல்லையா
ஹோ-திண்ணம் இல்லையா
நான் சின்ன பிள்ளையா
நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய கூச்சமில்லையா
தொல்லை செய்வதா பிள்ளை வைவதா பல்லை கொய்வதா
நீ காட்டுமுள்ளில் வேட்டி போல மாட்டி கொள்வதா
ஹே ஐய்யாரே ஐய்யாரே ஆடு மாமா ஐய்யாரே ஹோ
ஏ தையா தையா தையாரே ஹோ
ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி தேரா புத்தி தான்-ஹோ-ஹோ
ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி தேரா புத்தி தான்
தோம்தன-தோம்தன-தோம்-தோம்
தோம்த-தோம்த-தோம்த-தகிடதா-தின்-தி
தோம்-தோம்தன-தோம்-தோம்தன
தோம்த-தோம்த-தோம்-தத்-தோம்-தோம்-தோம்
முங்குநக-நீயா நானா
ததிங்குநக-நீயா நானா
தும்தக்-கதிடுதா-தகிங்-தின்ன-தக்க (ஹே)
தக்க-நீயா நானா-ஹே (ஹே)
தும்தகிட-தும்-தும்தகிட-தும்
தும்-தும்-தகிட-வா (ஹே-ஹே)
தும்தகிட-தும்-தும்தகிட-தும்
தும்-தும்-தகிட-வா (ஹே-மாமா)
க்ருதுதா (மா) க்ருதுதே (மா)
க்ருதுதா (மாமா) க்ருதுதே (மாமாமா)
வா-க்ருதுதா-க்ருதுதா-க்ருதுதா-வா
ஆ (ராட்சஸ மாமா)
ஹே-ராட்சஸ மாமா (நீயா நானா)
மாமா-மாமா-மாமா-மாமா
நானா நீயா நானா நீயா
நானா நீயா நானா நீயா
நானா நீயா நானா நீயா
ஆ-(ஹ-ஹ-ஹ-ஹ)
Written by: A. R. Rahman, Kabilan
instagramSharePathic_arrow_out

Loading...