Clip vidéo

Clip vidéo

Paroles

உண்மை ஒரு நாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீயடா நீயடா
பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே கலங்காதே
கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே
ராமனும் அழுதான் தர்மனும் அழுதான்
நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை
சிரித்து வரும் சிங்கம் உண்டு
புன்னகைக்கும் புலிகள் உண்டு
உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு
பொன்னாடை போர்த்து விட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில் ஒளிந்து நிற்கும் பூ நாகம் உண்டு
பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும்
அதன் உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது
உண்மை ஒரு நாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீயடா நீயடா
பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே கலங்காதே
கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே
சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா
மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே
கெட்டாலும் நம் தலைவன் எப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே
பொன்னோடு மண் எல்லாம் போனாலும்
அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது
உண்மை ஒரு நாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீயடா நீயடா
பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே கலங்காதே கலங்காதே
கலங்காதே கலங்காதே கலங்காதே கலங்காதே
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...