Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Faisal Razi
Voix principales
Yugabharathi
Interprète
G. V. Prakash Kumar
Interprète
COMPOSITION ET PAROLES
Yugabharathi
Paroles/Composition
G. V. Prakash Kumar
Composition
Paroles
[Intro]
வானே வானே, காலை வானே
உன்னை பார்த்தே கையை நீட்டும்
பூவே பூவே, காந்தல் பூவே
உன் பேர் கேட்டால் வாசம் கூட்டும்
நாள்தோறுமே
[Verse 1]
கண்ணே கண்ணே, காணா ஒன்றாய்
வந்தாய் நீயே மண்மீதிலே
முன்னே முன்னே, தோன்றா முத்தாய்
ஏனோ சேர்ந்தாய் என் கையிலே
பொன் மூங்கிலே உன் பேச்சிலே, கேட்காதோ எழிசையே
பூங்காற்றிலே உன் வாசனை, காட்டாதோ காதலையே
தேனூறும் சிறு பார்வை, மீட்டாதோ எனையே
[Chorus]
ஓடை துள்ளல் நீயானால்
உன் ஓசை நானல்லோ?
ஒரு மின்னல் நான் ஆனால்
என் மேகம் நீயல்லோ?
மாலை திங்கள் நீயானால்
உன் கோலம் நானல்லோ?
கார்க்காலம் வந்தாலே
என் கூதல் நீயல்லோ?
[Verse 2]
பூமரம் சிந்தா நிழலையும் நீயே
காத்திட வந்தாய் உறவினிலே
நியாபகமே மோத மூளும்
நாடகமே போதும்
இடைவெளி ஏதும் இல்லா
நினைவுகள் தாலாட்ட
வருகிறதே பாராட்ட
தேங்காமல் நீங்காமல்
காணும் காட்சியெல்லாம்
உன்னை மேலும் பேசாதோ
கானல் நீர் படமே
தீட்ட தாகம் கூடாதோ
[Outro]
வானே வானே, காலை வானே
உன்னை பார்த்தே கையை நீட்டும்
பூவே பூவே, காந்தல் பூவே
உன் பேர் கேட்டால் வாசம் கூட்டும்
Written by: G. V. Prakash Kumar, Yugabharathi


