क्रेडिट्स
PERFORMING ARTISTS
Papanasam Sivan
Performer
M. K. Thyagaraja Bhagavathar
Lead Vocals
COMPOSITION & LYRICS
Papanasam Sivan
Songwriter
गाने
சந்திர சூரியர் தீபங்களோ
சந்திர சூரியர் தீபங்களோ
ஒளி விண்மீன்கள் பிரபையோ
கபாலி
சந்திர சூரியர் தீபங்களோ
ஒளி விண்மீன்கள் பிரபையோ
கபாலி
ஒரு குடையாக கருநாகம்
மனோன்மணி தேவியோ
சந்திர சூரியர் தீபங்களோ
தெய்வங்கள் புடைசூழும்
பிரகாரம் கண்டேன்
கைகூப்பி தொழுது நின்றேன்
தெய்வங்கள் புடைசூழும்
பிரகாரம் கண்டேன்
கைகூப்பி தொழுது நின்றேன்
தெய்வானை வள்ளியோடு
முருகனைப் பாடும்
அருணகிரி அங்கே கண்டேன்
நடனம் ஒரு நளினம்
தில்லை நடராஜன்
சிவகாமியே
கபாலம் அதை ஏந்தும்
சிவன் அருகினிலே
ஒரு மோகினியே
துர்கா, கலைவாணி
மஹாலக்ஷ்மி பிரம்மன்
சண்டிகேசன் தரிசனமே
சந்திர சூரியர் தீபங்களோ
விஸ்வநாதர் விசாலாக்ஷி
நாகலிங்கம் கண்டேன்
பைரவரைப் பார்த்திருந்தேன்
விஸ்வநாதர் விசாலாக்ஷி
நாகலிங்கம் கண்டேன்
பைரவரைப் பார்த்திருந்தேன்
ஷங்கரர் வீரபத்ரர்
நந்தி தேவன் பிள்ளையார்
சட்டைநாதன் நால்வர் கண்டேன்
திருமால் அயன் காணா
லிங்கோத்பவரும்
அங்கு தோன்றினார்
மீரா குருமூர்த்தி
சூரியன் சேக்கிழார் வேண்டினேன்
நாயன்மார் அங்கு அனைவரும்
துதி பாடி மகிழும்
அருங்காட்சிகள் அதிசயமே
சந்திர சூரியர் தீபங்களோ
ஒளி விண்மீன்கள் பிரபையோ
கபாலி
ஒரு குடையாக கருநாகம்
மனோன்மணி தேவியோ
சந்திர சூரியர் தீபங்களோ
ஓ-ஓ-ஓ-ஆ-ஆ-ஆ-அ
Written by: Papanasam Sivan