क्रेडिट्स
PERFORMING ARTISTS
Thuva JB Chandran
Performer
Thuvaragan Jeyabalachandran
Rap
COMPOSITION & LYRICS
Thuvaragan Jeyabalachandran
Songwriter
PRODUCTION & ENGINEERING
Diluka Vishmika
Producer
गाने
அம்மா இது உனக்கு
உன் கருவறையில் அடைக்கலம் தந்ததட்கு,
தாய் உன் பாதத்திட்கு,
இந்த மகனின் சமர்ப்பணம்.
கோயில் குலம் எதுக்குடா ?
தெய்வம் வீட்டில் இருக்குடா!
கடவுளும் கையை தூக்கும்
தாயின் பாதம் பெருசுடா!
தேடாத வேறெங்கும்,
கற்பனையாய் பிம்பம்!
கண் கண்ட ஓர் தெய்வம்,
தாய் தான்டா என்றென்றும்!
கொன்னாலும் போகாது,
அன்னை அவள் பாசம்!
மாறாத ஓர் சொந்தம்,
தொப்புள் கொடி பந்தம்!
தாய் அன்ப பாராட்ட,
தேவை இன்னும் வார்த்தை!
நான் கொஞ்சம் கொண்டாந்தேன்,
கொண்டாட என் பாட்ட!
வருடம் தொண்ணூற்று ஒன்று,
மாதம் மாசி இருபத்து இரண்டு.
பிற்பகல் இரண்டு இருபத்து ஐந்து,
என்னை ஈன்றாள் அன்னை அன்று.
கொண்ட வலி உடல் பொறுத்து,
மீண்டும் புதிதாய் பிறந்து,
கைகளில் பிள்ளைச் சுமந்து,
கண்களும் கரைந்து அவள் முகம்
புன்னகை புரிந்து கண்ணீரும்,
வழிந்து என்மீது விழுந்து!
பார்வை திறந்து கண்டேன்,
என் உலகம் அன்று!
அன்னை மடி தந்த இன்பம்,
பசிக்கு மார்பில் அமுதம்!
அழும் போதும் அவள் அனைக்கும்,
ஆறுதல் தான் பக்க பலம்!
நாட்கள் ஓடியது,
அந்த காலம் கொடியது!
பள்ளி பருவம் கடந்து,
சிறுவன் உருவம் மாறியது!
நாட்புறம் தோள் சேர்ந்தது,
வீண் வம்பு கை கோர்த்தது!
நட்புவழி போதையும்,
தலை விறைக்க பாய்ந்தது!
என்ன செய்வேன் அம்மா ?
துரோகம் தோல்வி கண்ட பின்னால்,
என்னை தேற்றி விட்டாய் அத்தருணம்,
உள்ளம் கண்டது உன் புனிதம்!
எந்தன் நெஞ்சில் இன்றும் நித்தம்,
ஆரீரோ ஆராரோ சத்தம்!
கேட்பேன் வரம் ஆயுள் மொத்தம்,
வேண்டும் என் தாய் மடி சொர்க்கம்!
இன்னும் ஓர் பிறவி வேண்டும்.
எனக்கு நீ மகளாக!
உன்னை நான் தலையில் வைத்து தாங்க வேண்டும்
ராணியாக.. மகா ராணியாக..
அம்மா அன்று தீரும் என் கடன்.
கோயில் குலம் எதுக்குடா ?
தெய்வம் வீட்டில் இருக்குடா!
கடவுளும் கையை தூக்கும்
தாயின் பாதம் பெருசுடா!
தேடாத வேறெங்கும்,
கற்பனையாய் பிம்பம்!
கண் கண்ட ஓர் தெய்வம்,
தாய் தான்டா என்றென்றும்!
கொன்னாலும் போகாது,
அன்னை அவள் பாசம்!
மாறாத ஓர் சொந்தம்,
தொப்புள் கொடி பந்தம்!
தாய் அன்ப பாராட்ட,
தேவை இன்னும் வார்த்தை!
நான் கொஞ்சம் கொண்டாந்தேன்,
கொண்டாட என் பாட்ட!
விழுந்த குழந்தை எழுப்பி நிருத்தி,
ஓட பழக்குன அம்மா..
ஒரு ஜான் வயித்த நிறைக்க உனக்கு,
பட்டினி விரதம் கிடந்த அம்மா..
சத்தியம் அன்ப மட்டும் தந்து,
சரி பிழை சொன்ன தேவதை என்னைக்கும் அம்மா..
அவ பத்து மாசம் தவம் இருந்து,
உன்ன தான் பெத்து எடுக்க ஏன் சும்மா??
பச்சிளம் பருவம் நினைச்சு பாரு..
கதை சொல்லி தினம் நிலாச்சோறு..
வருத்தம் சுருண்டு தன் புள்ள வாடும்,
போதும் தூக்கம் ஏது ? தாய் மனம் ஏங்கும்!
பாசாங்கு உலகம், கண்ணையும் மறைக்கும்,
தெய்வம் பட்ட கஷ்டம் தெரியாது!
பொய் வேஷம் கட்டாம பாசத்தை கொட்டிய,
மெய் அன்புக்கு எப்பவும் விலை ஏது??
ஆயிரம் உறவும் பின்னால வந்தது. ஆனாலும் ஒன்னுன்னா யார் அங்க நொந்தது?
எந்த ஜென்மம் செஞ்ச புண்ணியமோ?
அவ புள்ளையா நீ வர பண்ணுனியோ?
காலம் பூரா அவ சிரிக்கோணும்!
உன் பாதை தன்னால விளக்கேறும்!
கைய உட்டுறாத எப்போதும்,
பெத்த கடன் கொஞ்சம் விட்டு தீரும்.
தாய் உள்ளம் நொந்து வாட வைக்காத..
தெரிஞ்சும் தவற தீண்டாத..
நம்பி உன்ன எண்ணி அவ ஜீவிச்சது,
வஞ்சகம் இல்லாத சொக்கத் தங்கம் அது!
அன்னைக்கு தினம் தான் எதுக்கு?
பாராட்டிடு அனு தினம் அவ சிறப்பு!
கால் தொட்டு வாங்கி பாரு ஆசி உனக்கு..
ஓர் நாளும் தப்பாது உள் மனக்கணக்கு!
கோயில் குலம் எதுக்குடா ?
தெய்வம் வீட்டில் இருக்குடா!
கடவுளும் கையை தூக்கும்
தாய் மட்டுந்தான் பெருசுடா!
தேடாத வேறெங்கும்
கற்பனையாய் பிம்பம்,
கண் கண்ட ஓர் தெய்வம்
தாய் முன்னில் யார் வெல்லும்!
கொன்னாலும் போகாது,
அம்மா வைச்ச பாசம்!
மாறாத ஓர் சொந்தம்,
அன்னை என் ஆலயம்!
தாய் அன்ப பாராட்ட
தேவை இன்னும் வார்த்தை,
கண்டெத்துக் கொண்டாந்தேன்,
கொண்டாடு என் பாட்ட!
-நன்றி என் தாய்க்கு
Written by: Thuvaragan Jeyabalachandran

