क्रेडिट्स
PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Performer
G.V. Prakash Kumar
Performer
D. Imman
Performer
Vijay Antony
Performer
Thaman S.
Performer
Karthi
Actor
Premgi Amaren
Actor
Hansika Motwani
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Gangai Amaran
Lyrics
गाने
திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே
வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே
உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை
எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா
கண்ணா வருவதை ஏற்றுக்கொள்
கால் பதிவுகள் அழியாது
வான்வெளி வரை தொட்டுச் செல்
உன் பரம்பரை முடிவேது
விழித்தவன் தூங்கக்கூடாது
எழுந்தபின் விழுதல் ஆகாது
வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்
தாராத ஒன்றை தருகிற நேரம் வா பறந்து
மண் மேல் இருந்து வின் போல் உயர்ந்து
எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா
ஒன்றே உறவென எண்ணிக்கொள்
இன்றே நிஜமென ஏற்றுக்கொள்
அன்பால் இணைந்தது விலகாது
அதுவே இறையருள் ஒப்புக்கொள்
நினைத்ததை நடத்தி முன்னேறு
நிலைக்கட்டும் நமது வரலாறு
ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ
எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்
ஆனந்தம் தான் ஆரம்பம் இது நிரந்தரம்தான்
திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே
வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே
உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை
எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா
Written by: Gangai Amaran, Yuvan Shankar Raja

