Dari
PERFORMING ARTISTS
T. M. Soundararajan
Performer
COMPOSITION & LYRICS
Viswanathan - Ramamoorthy
Composer
Kannadasan
Songwriter
Lirik
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
நீயென்ன சொல்றது அட நீ என்னய்யா சொல்றது
நான் சொல்றதுதான்யா correct'u
அட நான் சொல்றதுதான்யா correct'u
சும்மா சத்தம் போடாதீங்கப்பா
சும்மா இருங்கப்பா paper பார்த்துத்தான்ப்பா சொல்றேன்
ஹாஹா ஹாஹா ஹா
வீடெங்கும் திண்ணை கட்டி
வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்
சுதந்திரம் என்ன செய்யும்
சுதந்திரம் என்ன செய்யும்
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
நசுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை
அடைக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை
ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை
வேறொன்றும் நாம் செய்யத் தேவையில்லை
கேட்போம் உரிமை கேட்போம் உரிமை உரிமைஉரிமை
உரிமையோ உரிமை என்று
ஊரெங்கும் மேடை போட்டான்
கடமையோ கடமை என்று
காரியம் செய்தால் என்ன
காரியம் செய்தால் என்ன
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
விதியாகப் பட்டது வலியது
அதை யாரும் வெல்ல முடியாது
பாண்டவாளைப் பார்க்கலையோ
ஜானகியை விட்டு ஸ்ரீராமனையே பிரிக்கலையோ
பெரியவா சொன்ன வேதங்கள் பொய்யில்ல
ஆகவே விதி வலியது
விதியென்று ஏதும் இல்லை
வேதங்கள் வாழ்க்கை இல்லை
உடலுண்டு உள்ளம் உண்டு
முன்னேறு மேலே மேலே
முன்னேறு மேலே மேலே
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம்
வீடு தேடி வந்தது
Written by: Kannadasan, Viswanathan - Ramamoorthy