Video Musik
Video Musik
Dari
PERFORMING ARTISTS
A.R. Rahman
Vocals
Vairamuthu
Performer
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Songwriter
Vairamuthu
Songwriter
PRODUCTION & ENGINEERING
Mani Ratnam
Producer
G Srinivasan
Producer
Lirik
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறு முதல் சிரிப்பில்
வெள்ளை பூக்கள்
உலகம் எங்கும் மலரவே (மலரவே)
விடியும் பூமி
அமைதிக்காக விடியவே (விடியவே)
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறு முதல் சிரிப்பில்
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
காற்றின் பேரிசையும்
மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனையும்
கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ
வெள்ளை பூக்கள்
உலகம் எங்கும் மலரவே (மலரவே)
விடியும் பூமி
அமைதிக்காக விடியவே (விடியவே)
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
எங்கு சிறு குழந்தை
தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம்
போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
வெள்ளை பூக்கள்
உலகம் எங்கும் மலரவே (மலரவே)
விடியும் பூமி
அமைதிக்காக விடியவே (விடியவே)
Written by: A. R. Rahman, Vairamuthu


