Testi
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே
எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகின்றேன்
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகின்றேன்
வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே
வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே
விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே
Written by: Joel Thomas Raj, Pr. Blesson Daniel