album cover
Kulirudha Pulla
album cover
Kulirudha Pulla è stato pubblicato il 19 maggio 2019 da Divo Tv Private Limited come parte dell'album Kulirudha Pulla - Single
19 maggio 2019
EtichettaDivo Tv Private Limited
BPM
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Testi

ஒத்த உசுரு உன்னால நித்தம் கசியும் கண்ணால
தன்னந்தனியா தூங்குற குளுருதா புள்ள?
மண்ணுப்பட்டு கீருமேன்னு வச்சிருந்தேன் மாறு மேல
கீழப்பட்ட பாதம் ஏதும் உறுத்துதா புள்ள?
காத்தடிச்சா பயப்படுவ, மான் வலையில் அகப்படுவ
பொத்தி வச்சு பாத்துக்கிட்டேன், புரிஞ்சிதா புள்ள?
வாசங் கொஞ்சம் புடிச்சுக்கிறேன், காதுமடல் கடிச்சிக்கிறேன்
உஞ்சிரிப்ப ஞாபகத்தில் அடச்சுக்கிறேன்
அதுக்கு மட்டும் திரும்பி வா புள்ள, திரும்பி வா புள்ள
வெக்கத்துல ரவிக்க தச்சு, முத்தத்துல ஜிமிக்கி வச்சா
போதாதோ பூங்கோதையே?
ஓ சந்திரன தோலுருச்சு ஒத்தப் பக்கம் தோடு வச்சா
போதாதோ பூங்கோதையே?
பகல பாக்காத கூந்தல் (நெத்திச் சுட்டி முத்தமிடுதே)
இரவ பாக்காத தேகம் (தங்கத் துகளென மின்னல் விழுதே)
பூப்போட்ட வேர்வ மகரந்தமே மழையாச்சோ
கோச்சிக்கிட்டு நீ நடந்து, மொச்சிக்கிட்டு நான் கெடந்து
நாளாச்சு தேம்பாவணி
உன்ன கொஞ்சம் பேசவிட்டு தேன்தரட்டி சேர்த்து வச்சு
நாளாச்சு தேம்பாவணி
கழுத்து கோட்டோரம் ஏறி (அழகுல வந்து விழு நீ)
கவித மார்போடு மோதி (பத்து வளைவுல பித்துப்புடி நீ)
நான் பாத்த வானம் சதுரடியா வெல போச்சே
ஒத்த உசுரு உன்னால நித்தம் கசியும் கண்ணால
தன்னந்தனியா தூங்குற குளுருதா புள்ள?
மண்ணுப்பட்டு கீருமேன்னு வச்சிருந்தேன் மாறு மேல
கீழப்பட்ட பாதம் ஏதும் உறுத்துதா புள்ள?
Written by: Santhosh Narayanan, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...