album cover
Puthupunal
album cover
Puthupunal è stato pubblicato il 2 marzo 2015 da Vega Music come parte dell'album Mouna Guru (Original Motion Picture Soundtrack) - EP
Released2 marzo 2015
EtichettaVega Music
BPM96
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Video musicale

Video musicale

Testi

(தாரா நர-தர-தர-நர-தா)
(தாரே நர-நர-தரா ரே)
புதுப் புனல் எனப் பாய்கிறான்
புலர் வெயில் எனக் காய்கிறான்
புதிர் இவன் என வாழ்கிறான், யாரிவன்?
(தாரா)
ஜனத்திரள் எனும் மந்தையில்
ஜகம் எனும் மறுசந்தையில்
தனித்துலா வரும் விந்தைதான், யாரிவன்?
இவன் ஊரில் வாழும் பிறவியில் ஒருவன் அல்ல
இங்கு வார்த்தை ஏது, இவனுக்கு உவமைச் சொல்ல?
இந்த ஊர் தான் பேசும், இவன் ஒரு மௌன குரு
வானம் வெளுத்தது பாருங்கடா
மனசு வெளுக்கல கூறுங்கடா
தாகம் கரஞ்சது பாருங்கடா
தருமம் கறையல கூறுங்கடா
பூமி முழிச்சது பாருங்கடா
பூமி முழிச்சது பாருங்கடா
புத்தி முழிக்கல கூறுங்கடா
பூர்வ சென்மத்து புண்ணுங்கள
புகையைப் போட்டுத்தான் ஆத்துங்கடா
துந்துனாவத்தான் போட்டு போட்டு
சுருதிய மேலத்தான் ஏத்துங்கடா
(தாரா)
புதுப் புனல் என பாய்கிறான்
புலர் வெயில் எனக் காய்கிறான்
புதிர் இவன் என வாழ்கிறான், யாரிவன்?
(தாரா)
(தாரா)
நிலம் விழித்திடும் காலையில்
நிழல் விழுந்திடும் சாலையில்
வலம் வரான் ஒரு வாலிபன், யாரிவன்?
(தாரா)
தரைப்படாதொரு தாமரை
கடல் தொடாதொரு வான்மழை
முறைகெடாதொரு ஒரு மானிடன், யாரிவன்?
இவன் யாரோ யாரோ, யார் அதை அறிந்தவரோ
இவன் போகும் பாதை, யாரதை புரிந்தவரோ
அட இன்றும் என்றும், இவன் வழி தனிவழி தான்
ஆறும் செல்வது ஒரே வழி
அன்பு என்பது ஒரே மொழி
எங்கும் உள்ளது ஒரே சிவம்
எவரும் செய்வது ஒரே தவம்
மாறி மாறித்தான் எல்லாம் வரும்
மாறி மாறித்தான் எல்லாம் வரும்
மாற்றம் ஒன்றுதான் மாறாதுடா
கொண்டு வந்தது ஏதுமில்ல
கொண்டு செல்வது ஏதுமில்ல
வெந்த சோத்த தான் தின்னுபுட்டு
வேளை வந்ததும் ஓடுங்கடா
(தாரா)
Written by: S.S. Thaman, Vali
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...