クレジット
PERFORMING ARTISTS
Vijay Yesudas
Performer
Swetha
Performer
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Na Muthukumar
Songwriter
歌詞
மாமா மாமா, உம்பொண்ண கொடு மா மா
மேளங்கொட்டி நான் தாலிக்கட்டலா மா
ஹே, வாம்மா வாம்மா, நீ வெட்கம் விட்டு வாம்மா
மௌனம் கூட சம்மதம் தாம்மா
கும்பகோணத்து வெத்தலைய மடிடா
பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடி டா
தஞ்சாஊருக்கு தவில் ஒன்னு அடி டா
எட்டு தெசையிலும் இப்ப நம்மக்கொடி டா
ஒரு மேடைப்போட்டு
ஒரு மாலைப் போட்டு
புது மேளங்கொட்டு
அடி அண்ணாச்சி
ஒன்னும் இல்ல நேத்து
இப்போ வீசும் காத்து
நம்ம ரூட்ட பாத்து
நம் காட்டில் வெற்றி மழ
கும்பகோணத்து வெத்தலைய மடி டா
ஹெ... பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடி டா
வெண்ணிலவ பொட்டு வைக்க வாங்கி தரவா
மூக்குத்திக்கு நட்சத்திரக் கல்லு தரவா
வெண்ணிலவு நட்சத்திரம் காலை வரைக்கும்
உன்னுடைய அன்பக்கொடு ஆயுள் வரைக்கும்
வீடு முழுக்க வித வித விதமா
பட்டுச்சேல வாங்கித்தரவா
ஹ... பட்டுச்சேல கட்டும்போது வலிக்கும்
உன்ன உடுப்பா உடுத்திக்கவா
போதும் போதுமே மனசக்குள் இனிக்கிது
ஒன்ன போல புள்ளக்குட்டி பொறக்கணும் நமக்கு
கும்பகோணத்துவெத்தலைய மடி டா
பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடி டா
காதலிக்கும் பொண்ணு தரும் பார்வைபோதுமே
கட்ட வண்டி கூட ஒரு flight'u ஆகுமே
ஹே... கைப்பிடிக்க உன் விரல தந்தா போதுமே
கண்ணு ரெண்டும் சந்தோஷமா கண்ண மூடுமே
எந்தன் அருகில் நீதான் இருந்தால்
எந்த நாளும் வெற்றி எனக்கே
மண்ணில் நானும் இருக்கிறவரையில்
இந்த உசுரு என்றும் உனக்கே
போதும் போதுமே மனசுக்குள் இனிக்கிது
உன்ன போல புள்ளக்குட்டி பொறக்கனும் நமக்கு
மாமா மாமா, உம்பொண்ண கொடு மாமா
மேளங்கொட்டி நான் தாலிக்கட்டலாமா
ஹே, வாம்மா வாம்மா, நீ வெட்கம் விட்டு வாம்மா
மௌனம் கூட சம்மதம் தாம்மா
ஹா...
Written by: Na Muthukumar, Yuvan Shankar Raja