クレジット
PERFORMING ARTISTS
Anitha
Performer
Ghibran
Performer
Vimal
Actor
COMPOSITION & LYRICS
Ghibran
Composer
Vairamuthu
Songwriter
歌詞
செங்கல் சூலைக்காரா
செங்கல் சூலைக்காரா
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
செங்கல் சூலைக்காரா
செங்கல் சூலைக்காரா
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா
சுட்ட சுட்ட மண்ணு கல்லாச்சு
நட்ட நட்ட கல்லு வீடாச்சு
நச்சு நச்சுப் பட்ட நம்ம பொழப்புதான்
பச்ச மண்ணா போச்சே
வித்த வித்த கல்லு என்னாச்சு
வின்ன வின்ன தொட்டு நின்னாச்சு
மண்ணு குழிப்போல நம்ம பரம்பரை
பள்ளம் ஆகிப்போச்சே
அய்யனாரு சாமி
அழுது தீர்த்து பார்த்தோம்
சொரணைக்கெட்ட சாமி
சோத்த தானே கேட்டோம்
கால வாச தந்துப்போட
கள்ளி முள்ளு வெட்டி வாடா
செங்கல் சூலைக்காரா
செங்கல் சூலைக்காரா
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா
மண்ணு மண்ணு மட்டும் சோறாக
மக்க மக்க வாழ்ந்து வாராக
மழை மழை வந்து
மண்ணு கரைகையில்
மக்க எங்க போக
இந்த களி மண்ணு வேகாது
எங்க தலைமுறை மாறாது
மண்ண கிண்டி வாழும்
மண்ணு புழுவுக்கு
வீடு வாசல் ஏது
அய்யனாரு சாமி
கண்ணு தொறந்து பாரு
எங்க சனம் வாழ
ஒன்ன விட்டா யாரு
எதிர்காலம் உனக்காக
எட்டு எட்டு வச்சிவாடா
தந்தானே தானே
தந்தன்னானே தானே
வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள
விளக்கு ஏத்தும் வாடா
வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள
விளக்கு ஏத்தும் வாடா
Written by: Ghibran, Vairamuthu