クレジット
PERFORMING ARTISTS
Vani Jayaram
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Gangai Amaran
Songwriter
PRODUCTION & ENGINEERING
Ilaiyaraaja
Producer
歌詞
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா

நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
பச்சரிசி சோறு உப்பு கருவாடு சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு
குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
பாவக்கா கூட்டு பருப்போட சேத்து பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு
சிறுகால வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமையா
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு
பொட்டுகள்ள தேங்கா போட்டரச்ச தொவயலு
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்
அதுக்கு என ஒலகத்துல இல்லவே இல்ல
அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல
இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
Written by: Gangai Amaran, Ilaiyaraaja