クレジット

PERFORMING ARTISTS
Vanothan
Vanothan
Performer
COMPOSITION & LYRICS
Vanothan Ketheeswaran
Vanothan Ketheeswaran
Songwriter

歌詞

Music
கண்ணீரிலே கண்ணீரிலே
என் காதல் கரைகின்றதே
கல் மீதிலே விழும் கண்ணாடியாய்
என் ஜீவன் உடைகின்றதே
உயிர் சிலையே எந்தன் வரம் நீயடி
கனவினிலேனும் என் கரம் சேறடி
தடம் புரண்டேனே உன் மடி மீதடி
தவிழ்ந்திட வேண்டும் நீ என் தாய் மடி
கண்ணீரிலே கண்ணீரிலே
என் காதல் கரைகின்றதே
கல் மீதிலே விழும் கண்ணாடியாய்
என் ஜீவன் உடைகின்றதே
Music
என்னை புரியாமல் இருப்பது சோகம்
ஏனடி அணிந்தாய் ஓர் முகமூடியை
தொடர்வது ஏனோ உயிரணு மாயம்
அருகினில் இருப்பாய் என் தலை கோதிய
உன்னையே நினைத்தேன் ஓர் உயில் வரைந்தேன்
கணங்களும் தேய்கின்றதே
என் வலிகள் மறைத்தேன் நான் நித்தம் சிரித்தேன்
இரவுகள் காய்கின்றதே
என் சோகம் தீர என் வாசல் தேடி
என்னோடு கண்ணோடு நீ பேசடி
தொலைவினில் உன்னை பார்க்கையிலே
உயிரினில் ரணம் சேர்க்கிறதே
அருகினில் வரத்தானே துடித்தேன் தவித்தேன்
நினைவினில் உன் நியாபகமே
தினம் தினம் என்னை தாக்கியதே
தனிமையில் சில நேரம் உயிரோடெரிந்தேன்
கண்ணீரிலே கண்ணீரிலே
என் காதல் கரைகின்றதே
கல் மீதிலே விழும் கண்ணாடியாய்
என் ஜீவன் உடைகின்றதே
உயிர் சிலையே எந்தன் வரம் நீயடி
கனவினிலேனும் என் கரம் சேறடி
தடம் புரண்டேனே உன் மடி மீதடி
தவிழ்ந்திட வேண்டும் நீ என் தாய் மடி
கண்ணீரிலே கண்ணீரிலே
என் காதல் கரைகின்றதே
கல் மீதிலே விழும் கண்ணாடியாய்
என் ஜீவன் உடைகின்றதே...
Music
Written by: Vanothan Ketheeswaran
instagramSharePathic_arrow_out

Loading...