ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
T. M. Soundararajan
Performer
COMPOSITION & LYRICS
M. P. Sivam
Songwriter
歌詞
தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே முருகய்யா
தீஞ்சுவை யாகவில்லையே
தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே முருகய்யா
தீஞ்சுவை யாகவில்லையே
எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே குமரய்யா
இன்பம் ஏதும் இல்லையே
அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே முருகய்யா
அங்கம் மணக்கவில்லையே
அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே முருகய்யா
அங்கம் மணக்கவில்லையே
சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே குமரய்யா
சீர் மணம் வேறு இல்லையே
முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும்
முதற் பொருளாகவில்லையே முருகய்யா
முதற் பொருளாகவில்லையே
சத்திய வேலென்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே குமரய்யா
மெய்ப் பொருள் வேறு இல்லையே
எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆட வில்லையே முருகய்யா
எண்ணத்தில் ஆட வில்லையே
எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆட வில்லையே முருகய்யா
எண்ணத்தில் ஆட வில்லையே
மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே குமரய்யா
மற்றொரு தெய்வமில்லையே
தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே முருகய்யா
தீஞ்சுவை யாகவில்லையே
எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல்
இன்பம் ஏதும் இல்லையே குமரய்யா
இன்பம் ஏதும் இல்லையே
தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே முருகய்யா
தீஞ்சுவை யாகவில்லையே
முருகய்யா...
Written by: M. P. Sivam


