クレジット

PERFORMING ARTISTS
Ghibran
Ghibran
Performer
Roshini
Roshini
Performer
COMPOSITION & LYRICS
Ghibran
Ghibran
Composer
S. N. Anuradha
S. N. Anuradha
Songwriter

歌詞

மலருது புது நாளே
வளருது ஒளிதானே
உறவிங்கு இதம்தானே
அதிசய வரம்தானே
மலருது புது நாளே
வளருது ஒளிதானே
உறவிங்கு இதம்தானே
அதிசய வரம்தானே
அழகான நேசங்கள்
மாறாதினி தீராதினி
வேறேதும் தருமோ சுகம்
மெதுவாய் எதிர்காலம்
பூ பூக்குது மனம் வீசுது
வாராதோ பேரானந்தம்
ஆகாய நீலம்
தேயாது நாளும்
வானிங்கு விண்மீன் குளம்
ஆனந்த தீபம்
சாயாது வாழும்
வீடிங்கு ஓர் ஆலயம்
பலவித கிளி தினமே
ஒரு மரம் அடைந்திடுமே
பல உறவுகள் ஒரு உயிரென மறுகணம் இணைத்திடுமே
நிலவினில் பறந்திடவே
உறவுகள் துணை வருமே
சுடு வெயிலினில் கரு நிழலென
அனுதினம் அவசியமே
ஒரு தழுவலில் பல விரிசலும்
சிறு கனவென மறையாதோ
ஒரு நொடியினில் மன வருத்தமும்
பனி திரையென விலகாதோ
உறவுகளிங்கு மனதருகினில் நிதம் வேண்டுமே
உலகினை இங்கு சுமந்திடும் ஒரு பலமே
இமையினை இங்கு விழி இரண்டினை அடை காக்குமே
உயிர் வரை இங்கு கலந்திடும் ஒரு நிஜமே
மலருது புது நாளே
வளருது ஒளிதானே
உறவிங்கு இதம்தானே
அதிசய வரம்தானே
மலருது புது நாளே
வளருது ஒளிதானே
உறவிங்கு இதம்தானே
அதிசய வரம்தானே
அழகான நேசங்கள்
மாறாதினி தீராதினி
வேறேதும் தருமோ சுகம்
மெதுவாய் எதிர்காலம்
பூ பூக்குது மனம் வீசுது
வாராதோ பேரானந்தம்
ஆகாய நீலம்
தேயாது நாளும்
வானிங்கு விண்மீன் குளம்
ஆனந்த தீபம்
சாயாது வாழும்
வீடிங்கு ஓர் ஆலயம்
Written by: Ghibran, S. N. Anuradha
instagramSharePathic_arrow_out

Loading...