クレジット
PERFORMING ARTISTS
K.S. Chithra
Performer
Tharun
Performer
Sneha
Performer
COMPOSITION & LYRICS
Siva C
Composer
Siva. C,Vivega
Songwriter
歌詞
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது
அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல
வெட்கங்கள் வர வைக்கிறாய்
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது
காதல் சுகமானது
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது
லலலா-லலல-லலல-லா
லலலா-லலல-லலல-லா
சின்ன பூ ஒன்று பாறையை தாங்குமா
உன்னைச் சேராமல் என் விழி தூங்குமா
தனிமை உயிரை வதைக்கின்றது
கண்ணில் தீ வைத்து போனது நியாயமா
என்னை சேமித்து வை நெஞ்சில் ஓரமா
கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது
தூண்டிலினை தேடும் ஒரு மீன் போல ஆனேன்
துயரங்கள் கூட அட சுவையாகுது
இந்த வாழ்கை இன்னும் இன்னும் ரொம்ப ருசிக்கின்றது
காதல் சுகமானது
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது
(லல-லல-லா-லா)
(லல-லல-லா-லா)
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா
நீயும் ஆனந்த பைரவி ராகமா
இதயம் அலை மேல் சருகானதே
ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில்
வந்து மோதிய இரும்பு மேகமே
தேகம் தேயும் நிலவானதே
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது
காதல் சுகமானது
ம்ம்-சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது
அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல
வெட்கங்கள் வர வைக்கிறாய்
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது
காதல் சுகமானது
(லலலா-லல-லலா)
(லல-லல-லா-லா-லா)
(லலலா-லல-லலா)
(லல-லல-லா-லா-லா)
Written by: Siva C, Siva. C, Vivega

