クレジット
PERFORMING ARTISTS
Silambarasan TR
Lead Vocals
Mc Sai
Performer
Nivas K Prasanna
Lead Vocals
COMPOSITION & LYRICS
Mc Sai
Songwriter
Nivas K Prasanna
Composer
Mohan Rajan
Songwriter
歌詞
ஆறுமுக வேலனே ஆடும் மயில் அழகனே
ஞான குரு பாலனே ஞான குரு பாலனே
பழனி மலை முருகனே
முருகா முருகா முருகா
அட்றா ஹே ஹே ஹே ஹே
ஓம் சரவண பவ ஷண்முக குக
அறுபடை உடை முருகா
சரவணா பவ ஷண்முக குக
அறுபடை உடை முருகா
அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா
அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா
கவலைகள் சிதறி பதறி ஓட வேண்டும் முருகா
வலிகளை விசிறி உதறி எரிய வேண்டும் முருகா
பயங்களும் அலறி கதறி விலக வேண்டும் முருகா
பலமுடன் குமுறி திமிறி நிமிர வேண்டும் முருகா
சரவண பவ ஷண்முக குக
ஷண்முக குக சரவண பவ
கந்தா கடம்பா கதிர்வேலா
மண்ணை காக்கும் மயில் வேலா
ஹே கந்தா கடம்பா கதிர்வேலா
சங்கடம் தீர்க்கும் சிவபாலா
தகதகிட தகதிமிதகிட
சரவண பவ ஷண்முக குக
அறுபடை உடை முருகா
சரவண பவ ஷண்முக குக
அறுபடை உடை முருகா
அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா
அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா
என்னுடைய கருணை விழிகள்
கள்ளங்கள் துடைக்க மனங்கள் தெளிய
ஆறு படை முருகனின் காவடிகள் கால் கடுக்க
கல் கடந்த காலடிகள்
வெற்றி வேல் வீர வேல்
ஞான வேல் மாய வேல்
சக்தி வேல் தங்க வேல் முருக வேல்
தமிழ் கடவுளாய் முருகன் இருக்க
துயரம் தடைகள் தெறிக்க
சங்கு ஒலியிலும் செங்குருதியும்
கடல் அலையிலும் விண்வெளியிலும்
என் முருகனின் அருள் பொழிந்திடும்
மன களத்தினில் கலியுகம் எனில்
ஒரு மனம் என கலை கவியுடன்
களம் இறங்கிட மதி தெளிந்திடும்
அரண் மகன் ஆறுமுகன் மனோகரன்
கார்த்திகேயன் தண்டபாணி கடம்பன்
கந்தன் குமரன் சேனாபதி
செந்தில் சித்தன் நீயே கதி
விடுகதை போக்கவா விடுதலை ஆக்கவா
விதி வழி போகும் வாழ்வை
மதியோடு மாற்றவா முருகா
எது வரும் போதிலும் துணிவுடன் மோதவா
துணை நீ நிற்கும் போது துயர் நீங்கும் அல்லவா
மனம் அதிருது உடல் அதிருது
புயல் என சுழன்றாடவே
புதிர் அவிழுது புது உணர்விது
புது உலகினை காணவே
தடை உடையுது தடம் தெரியுது
தலை நிமிர்ந்து இங்கு ஓங்கவே
தெளிவடையுது திசை தெரியுது
விறு விறுவென ஏறவே
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா
ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடை சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மனம் புணர வந்த முகம் ஒன்றே
அந்த சிவனிடம் விடை வாங்கி
பழனி மலையை அடைந்த ஆண்டவா
ஆதி அருணாச்சலமாய் அமர்ந்த வடிவேலவா
உனதடி உருகி மருகி
வேண்டி நின்றேன் முருகா முருகா
உன் பெயர் உலகம் முழுதும்
எடுத்து சொல்வேன் முருகா முருகா
உனக்கென இரவும் பகலும்
நடந்து வந்தேன் முருகா
பலவித துயரம் சுமந்து
உடைத்து வந்தேன் முருகா
நல் வழியினை நீ வழங்கிடு
என் நிழலென நீ இருந்திடு
எங்கும் எதிலும் நீதானே
பொங்கும் தமிழும் நீதானே
கந்தா கடம்பா கதிர்வேலா
சங்கடம் தீர்க்கும் சிவபாலா
ஹே கந்தா கடம்பா கதிர்வேலா
மண்ணை காக்கும் மயில் வேலா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா அழகனுக்கு அரோகரா
மூத்த குடி முதல்வனுக்கு
தமிழ் குடியின் தலைவனுக்கு
Written by: Madurai R. Muralidharan, Mc Sai, Mohan Rajan, Nivas K Prasanna

