歌詞

தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்க தாமரை மகளே வா அருகே தங்க தாமரை மகளே இள மகளே வா அருகே செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை நீக்க தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவுது மனமே வா அழகே பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம் கனைக்கும் தவளை துணையை சேரும் கார்காலம் பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம் பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம் நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்க தாமரை மகளே தத்தி தாவுது மனமே தங்க தாமரை மகளே தத்தி தாவுது மனமே வா
Writer(s): Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out