ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Performer
S. Janaki
Performer
Mohan
Actor
Karthik
Actor
Revathy
Actor
Mani Ratnam
Conductor
Revathi
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Vaalee
Lyrics
PRODUCTION & ENGINEERING
G. Venkateswaran
Producer
歌詞
ஒஹோ-மேகம் வந்ததோ
ஏதோ ராகம் தந்ததோ
எல்லாம் பூவைக்காக தான்
பாடும் பாவைக்காக தான்
பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண்பாக்கள் பாடாதோ
தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ
(ஒஹோ-மேகம் வந்ததோ)
(ஏதோ ராகம் தந்ததோ)
யாரும் சொல்லாத காவியம்
ஆடை கொண்டிங்கு ஆடுது
நேரம் கொண்டால் என்ன பொன்னோவியம்
வண்ணம் மாறாமல் மின்னுது
நான் பெண் ஆனது கல்யாணம் தேடவா
(ஓர் கண்ணாளன் வந்து பூமாலை போடவா)
(ஏன் அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்)
யார் வந்தாலும் என்ன திரும்பாது ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே-டுடு-டுடு-டுடு-டுடு-டு
(ஒஹோ-மேகம் வந்ததோ)
(ஏதோ ராகம் தந்ததோ)
கால்கள் எங்கேயும் ஓடலாம்
காதல் இல்லாமல் வாழலாம்
வண்ண மின்னல்களாய் நின்றாடலாம்
வாழ்வின் சங்கீதம் பாடலாம்
நாம் இந்நாளிலே சிட்டாக மாறலாம்
(வா செவ்வானம் எங்கும் ஜிவ்வென்று ஏறலாம்)
(நாம் எல்லோருமே செம்மீன்கள் ஆகலாம்)
வா நீரோடை எங்கும் வெள்ளோட்டம் போகலாம்
வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்-டுடு-டுடு-டுடு-டுடு-டு
ஒஹோ-மேகம் வந்ததோ
ஏதோ ராகம் தந்ததோ
எல்லாம் பூவைக்காக தான்
பாடும் பாவைக்காக தான்
பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண்பாக்கள் பாடாதோ
தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ
(ஒஹோ-மேகம் வந்ததோ)
(ஏதோ ராகம் தந்ததோ)
(பா-பா-பாப-பாப-பா)
(பா-பா-பாப-பாப-பா)
(பா-பா-பாப-பாப-பா)
Written by: Ilaiyaraaja, Vaalee


