クレジット

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Lead Vocals
Bhavatharini
Bhavatharini
Lead Vocals
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Palani Bharathi
Palani Bharathi
Songwriter
PRODUCTION & ENGINEERING
Swargachitra
Swargachitra
Producer

歌詞

தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா?
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் தெரியாதா?
அள்ளி கொடுத்தேன் மனதை
எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை
கட்டி பிடித்தேன் தலையணையை
குண்டு மல்லி கொடியே கொள்ளையடிக்காதே நீ
தென்றல் வரும் வழியை ந-ந-ந-ந-நா
தென்றலுக்கு மலரின் ந-ந-ந-ந-நா
நீயா அட நானா
நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்?
காதல் என்னும் ஆற்றில்
இங்கு முதல் முதல் குதித்தது யார்?
என்னில் உன்னை கண்டேன்
நம்மை இரண்டென பிரிப்பது யார்?
தேகம் அதில் ஜீவன்
ஒன்று பிரிந்திட இருப்பது யார்?
துன்பம் நீ கொடுக்கும் துன்பம்
கூட இன்பம்
ஏங்கும் நெஞ்சில் ஏக்கம்
என்றும் தொடரவேண்டும்
குண்டு மல்லி கொடியே கொள்ளையடிக்காதே
வெண்ணிலவு மகளே உன்னை மறைக்காதே
தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா?
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் தெரியாதா?
அள்ளி கொடுத்தேன் மனதை
எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை
கட்டி பிடித்தேன் தலையணையை
குண்டு மல்லி கொடியே கொள்ளையடிக்காதே நீ
தென்றல் வரும் வழியை ந-ந-ந-ந-நா-ந
தென்றலுக்கு மலரின் ந-ந-ந-ந-நா-ந
காதல் உன் காதல்
அது மலையென வருகிறதே
நெஞ்சம் என் நெஞ்சம்
அதில் சுட சுட நனைகிறதே
வானம் என் வானம்
ஒரு வானவில் வருகிறதே
மௌனம் என் மௌனம்
ஒரு வார்த்தைக்கு அலைகிறதே
பார்த்தேன் காதல் பயிரின்
விதைகள் உன் கண்ணில்
வளர்த்தேன் முட்கள் பூக்கும்
செடியை எந்தன் நெஞ்சில்
குண்டு மல்லி கொடியே கொள்ளையடிக்காதே
வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே
தென்றல் வரும் வழியை ந-ந-ந-ந-நா-ந
தென்றலுக்கு மலரின் ந-ந-ந-ந-நா-ந
அள்ளி கொடுத்தேன் மனதை
எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை
கட்டி பிடித்தேன் தலையணையை
குண்டு மல்லி கொடியே கொள்ளையடிக்காதே நீ
தென்றல் வரும் வழியை ந-ந-ந-ந-நா-ந
தென்றலுக்கு மலரின் ந-ந-ந-ந-நா-ந
Written by: Palani Bharathi
instagramSharePathic_arrow_out

Loading...