クレジット

PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Vijay Prakash
Vijay Prakash
Performer
Abhay Jodhpurkar
Abhay Jodhpurkar
Performer
Megha
Megha
Performer
Vijay
Vijay
Actor
Amala Paul
Amala Paul
Actor
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Na. Muthukumar
Na. Muthukumar
Lyrics

歌詞

சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னைத் தாக்க
அந்தி மாலைச் சூரியனும்
மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே
உன் நெருக்கம் வேண்டுதே கண்ணே கண்ணே
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னைத் தாக்க
அந்தி மாலைச் சூரியனும்
மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
கனவுகள் கேட்குது நீ வர கைவிரல் கேட்குது நீ தொட
யாரோ என்னை பார்க்கும் ஒரு எண்ணம் தோன்றிட
நீயும் என்னை பார்ப்பேன் அதை எங்கே சொல்லிட
என் நேரமின்று அவசரமாக மாறிப் போனதே
என் செய்கை இன்று ரகசியமாக என்னை ஆளுதே
இலைகளில் தண்ணீர் துளி விழுவதும்
வெயில் வந்து மெல்ல அது எழுவதும்
இயற்கையில் நடக்கிற ரகசியம் அன்பே அன்பே
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னைத் தாக்க
அந்தி மாலைச் சூரியனும்
மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
இருவரும் ஒரு மொழி பேசலாம்
இடையினில் மௌனத்தில் பேசலாம்
பெண்ணே என் நெஞ்சம் எனும் பூட்டைத் திறக்க
கண்ணே உன் கண்கள் அதை சாவி கொடுக்க
என் பேரில் உந்தன் பேரினைச் சேர்க்க ஆசை வந்ததே
உன் தோளில் எந்தன் தோள் வந்து சாய நேரம் வந்ததே
இது இது இது ஒரு இன்பமா
இது இது இது ஒரு துன்பமா
இன்பமும் துன்பமும் சேர்ந்ததா சொல்வாய் பெண்ணே
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னைத் தாக்க
அந்தி மாலைச் சூரியனும்
மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே
உன் நெருக்கம் வேண்டுது கண்ணே கண்ணே
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
நானா நானா நானா நானா நானா நானா
நானா நானா நானா நானா நானா நானா
Written by: G. V. Prakash Kumar, Na. Muthukumar
instagramSharePathic_arrow_out

Loading...