크레딧
가사
அடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன?
இரும்பு மனச முழுசா உருக்கி போன
தினமும் உன் கூட விடிஞ்சா நான் பேச
எழுந்து பாக்குறப்போ பக்கத்துல நீ இல்ல
உடஞ்ச கல் போல கிடந்தேன் வழி மேல
உன்ன நான் பாக்கும் அந்த நொடிய
நெனச்சு கிடந்து தவிச்சேன்
அடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன?
இரும்பு மனச முழுசா உருக்கி போன
அலஞ்சு திருஞ்சு நானும் வழிய மறந்து போன
வருஷமெல்லாம் வீணே வயசு கூடுதே
அழுகை வந்த போதும் உள்ள அழுது நொந்தேன்
நண்பன் கிட்ட தானே கொட்டி தீக்குறேன்
ரோட்டுல வீதியில் உன்ன பாக்குறேன்
ஏதேதோ தோணுதே ஏமாந்து போகுறேன்
உண்மையில் உன் ஏக்கங்கள் நெஞ்சுல
அடி மனசுல அணை கட்டி வச்சேன்
அணை உடைஞ்சு பாயுது
அலை அடிக்குது கரை ஒதுங்குது
நுரை மட்டும் விட்டு போகுது
ஒத்த மனசுல நீ இருக்குற
மொத்தமும் உனக்கு தோணல
பட்டினி கிடந்து பத்தியம் இருக்கேன்
மறுபடி என்ன சேரடி கிளியே...
வாழ்க்கை வெறுத்து போச்சு அனாதையாக ஆனேன்
தன்னாலே நீயும் வந்த மெய்யாக தோணுமே
வானம் இடிஞ்சு போச்சு நிலாவும் ஈரமாச்சு
நீ இல்லாத வாழ்க்கை பொய்யாக மாறுதே
கெஞ்சி நான் கேக்குறேன் கொஞ்சம் இரங்கடி
நீயாக பேசுன நீயாக வந்தவ
இப்ப ஏன் என்ன கண்டாலே நடிக்கிற
ஒன்னு வாழ விடு இல்லை சாக விடு
ரெண்டும் கெட்டு நானும் வாழுறேன்
என்ன மன்னிச்சிடு இல்லை புதச்சிடு
எதுக்கு இப்படி படுத்துற
கண்ண பாக்க வேணும் கைய புடிக்கணும்
இதுக்கு தானே ஏங்குறேன்
மறுபடி நீயும் வந்து சேர
இந்த உசுர பிடிச்சு வைக்கிறேன் அடியே...
அடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன?
இரும்பு மனச முழுசா உருக்கி போன
தினமும் உன் கூட விடிஞ்சா நான் பேச
எழுந்து பாக்குறப்போ பக்கத்துல நீ இல்ல
உடஞ்ச கல் போல கிடந்தேன் வழி மேல
உன்ன நான் பாக்கும்
அந்த நொடிய நெனச்சு கிடந்து தவிச்சேன்
அடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன?
இரும்பு மனச முழுசா உருக்கி போன
Written by: A