크레딧
실연 아티스트
Pradeep Kumar
실연자
작곡 및 작사
Justin Prabhakaran
작곡가
Yugabharathi
작사가 겸 작곡가
가사
தந்தானே னானே னானே னானா
தந்தானே னானே னானே னானா
எட்டூரு கேட்க கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்ட வேணும் தாளம்
பட்டாச போடும் நல்ல காலம் காலம்
பக்காவா ஒன்ன சேர்ந்து வாழும்
கண்ணால வச்சாளே கச்சேரிதான்
வளையல் கொலுசு சினுங்க
வருவா வருவா இளவரசி
அழக மழையா பொழிஞ்சி
மனச தொடுவா அவளரசி
எட்டூரும் கேட்க கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும் தாளம்
கல்யாணமே வைபோகமே
கை சேருமே எல்லாமுமே
மாங்கல்யம் மாறும் வரம்
பூ மஞ்சள் யாவும் தரும்
தல காலு புரியல புரியல
தலும்புற நீயும் அவளால
இருந்தாலும் வெளியில வெளியில
நடிக்கிறேன் ஞான பழம்போல
கண்ணால அவன் ஜாடக் காட்ட
மூணாம் பிறை ஆனாயே
காலால அவ கோலம் போட
தானா கொடை சாஞ்சாயே
எப்பவும் நீ தான்
எப்பவும் நீ தான்
அஞ்சாத மச்சக்காள
பெண் அவ வாசம் தள்ளாதோ உன்னைக் கீழ
அவ காதோரம் ஓயாத லோலாக்குப் போல
உன் சந்தோஷம் அவ கையில
வளையல் கொலுசு சினுங்க
வருவா வருவா இளவரசி
அழக மழையா பொழிஞ்சி
மனச தொடுவா அவளரசி
நிழலா உன் வழியில வழியில
வர துணிஞ்சாலே மகராசி
முழுசா உன மனசுல மனசுல
இடம் புடிச்சாளே வலை வீசி
அம்மாடி அவ ஆளப் போல
என்னாகுமோ உன் வீடு
கண்ணாடி என காலம் பூரா
காப்பாத்து நீ அன்போடு
நெஞ்சில நேசம் நெஞ்சில நேசம்
கொண்டாலே இல்ல மோசம்
தொட்டில ஆட்டி தாலாட்ட பத்து மாசம்
இந்த ஊராரும் பாராட்ட வாழ்வாங்கு வாழ
அவ வாராளே உன் தேவத
எட்டூரும் கேட்க கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும் தாளம்
பட்டாச போடும் நல்ல காலம் காலம்
பக்காவா ஒன்ன சேர்ந்து வாழும்
கண்ணால வச்சாளே கச்சேரிதான்
வளையல் கொலுசு சினுங்க
வருவா வருவா இளவரசி
அழக மழையா பொழிஞ்சி
மனச தொடுவா அவளரசி
வளையல் கொலுசு சினுங்க
வருவா வருவா இளவரசி
அழக மழையா பொழிஞ்சி
மனச தொடுவா அவளரசி
Written by: Justin Prabhakaran, Yugabharathi