크레딧
실연 아티스트
Ilango Krishnan
실연자
Shakthisree Gopalan
보컬
작곡 및 작사
A. R. Rahman
작곡가
Ilango Krishnan
가사
Andal Pasuram
작사가 겸 작곡가
프로덕션 및 엔지니어링
A. R. Rahman
프로듀서
가사
[Chorus]
அகநக, அகநக
முகநகையே-ஓஹ்!
முகநக, முகநக
முருநகையே-ஹோ!
முறுநக, முறுநக
தருநகையே-ஓஹ்!
தருநக, தருநக
வருணனையே!
யாரது, யாரது
புன்னகை கோர்ப்பது!
யாவிலும், யாவிலும்
என் மனம் சேர்ப்பது!
[Verse 1]
நடை பழகிடும்
தொலை அருவிகளே-ஓஹ்!
முகில் குடித்திடும்
மலை முகடுகளே-ஓஹ்!
குடை பிடித்திடும்
நெடு மர செறிவே!
பனி உதிர்த்திடும்
சிறு மலர் துளியே!
[Verse 2]
அழகிய புலமே!
உனது இளமகள் நான்!
வளவனின் நிலமே!
எனது அரசியும் நீ!
வளநில சிரிப்பே
எனதுயிரடியோ!
உனது இளம் வனப்பே
எனக்கு இனிதடியோ!
உனை நினைக்கையிலே
மனம் சிலிர்த்திடுதே!
உன் வழி நடந்தால்
உயிர் மலர்ந்திடுதே!
உன் மடி கிடந்தால்
தவி-தவிக்கிறதே!
நினைவழிந்திடுதே!
[Chorus]
அகநக, அகநக
முகநகையே-ஓஹ்!
முகநக, முகநக
முருநகையே-ஓஹ்!
முறுநக, முறுநக
தருநகையே-ஹோ!
தருநக, தருநக
வருணனையே!
யாரது, யாரது
புன்னகை கோர்ப்பது!
யாவிலும், யாவிலும்
என் மனம் சேர்ப்பது!
[Chorus]
யாரது, யாரது
புன்னகை கோர்ப்பது!
யாவிலும், யாவிலும்
என் மனம் சேர்ப்பது!
Written by: A. R. Rahman, Ilango Krishnan