Songteksten

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே என் பிரியத்தை அதனால் குறைக்கமாட்டேன் எரியும் உடலென்று தெரியும் பெண்ணே என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன் மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில் என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன் துண்டு துண்டாய் உடைந்த மனத் தூகளையெல்லாம் அடி தூயவளே உனக்குள் தொலைத்துவிட்டேன் மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும் எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன் இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன் மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி ஓடி ஓடிப் போகாதே ஊமைப் பெண்ணே நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை
Writer(s): Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out