Muziekvideo
Muziekvideo
Credits
PERFORMING ARTISTS
K. J. Yesudas
Performer
COMPOSITION & LYRICS
Gangai Amaran
Songwriter
Songteksten
காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம்
கார்த்திகை மார்கழி காலம்தோறும் புண்ணிய தரிசனம்
நேற்றிலும் இன்றிலும் நாளையும் நாங்கள் கண்டிடும் தரிசனம்
வார்த்தையில் சொல்ல வார்த்தை வராத உன் முகதரிசனம்
வானவர்தேடி வந்து வணங்கும் தேவனின் தரிசனம்
வானம்பூமி யாவும் மகிழ்ந்து காணும் தரிசனம்
வாடிய உள்ளம் வசந்தம் காணும் ஐயனின் தரிசனம்
காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம்
கார்த்திகை மார்கழி காலம்தோறும் புண்ணிய தரிசனம்
பாவங்கள் என்று தெரிந்திருந்தாலும் விலகிட முடியாமல்
பாசங்கள் பந்தங்கள் நேசங்கள் யாவும் மறுத்திட இயலாமல்
கோபங்கள் தாபங்கள் மீறிட நாங்கள் குறைத்திட முடியாமல்
குணங்களில் இருள்வரப் பகலிலும் எங்கள் பொழுதும் விடியாமல்
இத்தனைபாவம் யாவையும் போக்கும் சாமியே சரணம்
சத்தியமாக சத்தியம் காக்கும் சாமியே சரணம்
பூமியில் எங்களின் புகலிடம் ஒன்று உன்திருவடி சரணம்
காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம்
கார்த்திகை மார்கழி காலம்தோறும் புண்ணிய தரிசனம்
நீலிமலையிலும் நிழலென வந்து ஏற்றிவிடென் ஐயா
நேரே காணும் ஏற்றத்தில் எங்களைத் தூக்கி விடென் ஐயா
பாதம் தளர்ந்திட பசியது கூடிட பார்த்திடும் என்ஐயா
பாடும் பாவிலும் படித்திடும் நாவிலும் இருந்திடு என் ஐயா
வாடிமெலிந்து வருகிற எங்களைக் காத்திடும் என்ஐயா
நாடி ஒடுங்கி நடந்திடும் நாங்கள் நம்பிய என்ஐயா
காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம்
கார்த்திகை மார்கழி காலம்தோறும் புண்ணிய தரிசனம்
மலையினில் ஏறிடும் மணிகண்டசாமிக்கு துணையது நீ ஐயா
தேகம் தளர்ந்தாலும் திந்தகத்தோம் எனப்பாடுகிறோம் ஐயா
இருமுடி ஏந்தும் தலைமுதல் கால்வரை இருந்திடும் என் ஐயா
வழித்துணை நீயென வந்திடும் சுவாமிகள் வணங்கிடும் என் ஐயா
பாதபலம்தா தேகபலம்தா பம்பாவாசனே
பாவங்களோடிட பார்த்திடும் நாங்கள் நம்பிய தேவனே
காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம்
Written by: Gangai Amaran