Muziekvideo
Muziekvideo
Credits
PERFORMING ARTISTS
Srinivas
Vocals
A.R. Rahman
Vocals
Sujatha Mohan
Vocals
Vairamuthu
Performer
Vindhiya
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Vairamuthu
Lyrics
Songteksten
முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்
எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி
மறுமுறை உயிா் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்
முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்
எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி
மறுமுறை உயிா் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்
முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும்
ஏன், கண்ணீர் உண்டு சோகமில்லை
ஆமாம் மழை உண்டு மேகமில்லை
கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி
அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன
சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்
பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன
விதை ஒன்று உயிா் கொள்ள
வெப்பம் காற்று ஈரம் வேண்டும்
காதல் வந்து உயிா் கொள்ள காலம் கூட வேண்டும்
ஒரு விதை உயிா் கொண்டது
ஆனால் இரு நெஞ்சில் வோ் கொண்டது
சலங்கையே கொஞ்சம் பேசு
மௌனமே பாடல் பாடு
மொழி எல்லாம் ஊமையானால்
கண்ணீா் உரையாடும்
அதில் கவிதை அரங்கேறும்
பாதையும் தூரம் நான் ஒரு பாரம்
என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா
உடலுக்குள் இருக்கும் உயிா் ஒரு சுமையா
பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா
தந்தை தந்த உயிா் தந்தேன்
தாய் தந்த உடல் தந்தேன்
உறவுகள் எல்லாம் சோ்த்து
உன்னிடம் கண்டேன்
மொத்தத்தையும் நீ கொடுத்தாய்
ஆனால் முத்தத்துக்கோா் நாள் குறித்தாய்
முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்
எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி
மறுமுறை உயிா் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்
முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும்
ஏன், கண்ணீர் உண்டு சோகமில்லை
ஆமாம் மழை உண்டு மேகமில்லை
Written by: A. R. Rahman, Vairamuthu