Credits

COMPOSITION & LYRICS
Tamizh & Afzal
Tamizh & Afzal
Songwriter

Songteksten

எனை நானே தேடித்தேடி
முதலும் முடிவாய் ஆனேனே!
தரைதத்தும் மேகம் போலே
தள்ளாடி நானும் மிதந்தேனே!
ஒர் கானல் நீரின் மேலே
கண்ணாடி பூவாய் உடைந்தேனே
தடம்மாறும் நிலையை அடைந்தே
தடமும் புரண்டேன் எதனாலே !
அடியாத்தி...அடியாத்தி....
எனை இழந்தேன்.... முழுதாய்...
அடியாத்தி...அடியாத்தி....
தொலைந்தேனே..... சுகமாய்...
ஓர்நாளும் காணா உலகை
கண்டேனே உன்னிரு விழியாலே..!!
புதிதாக காற்றும் வீசிட
இதயம் திறந்தது இதழ்போலே.!!
பிறையானது உந்தன் முகமே
மேகங்கள் திரையில் மறையாதே!
அடடா என் ஆழியில் அலையும்
தவழ்ந்திட மறந்தும் பிழைக்காதே..!!
அடியாத்தி...அடியாத்தி....
எனை இழந்தேன்.... முழுதாய்...
அடியாத்தி...அடியாத்தி....
தொலைந்தேனே..... சுகமாய்...
கோதை நிலவாய்
குமிழ்கள் மேலே..
முகில்கள் தீண்டி..
தொலைந்தது ஏனோ...?
வாடை காற்றாய்
முகில்கள் தீண்ட
நிலவின் ஒளியே..
பொழிந்திடத் தானோ ..
தொடுவானமாய் தொடர்கின்றதே.!
தொலைதூரமாய் நெடுகின்றதே
வழிபோக்கிலே மனம்போனதே
உனை கண்டதும் தடம்மாறுதே..
உன்னை காணும் வரை
எந்தன் காதல் பிழை
என்றே நெஞ்சம் சொன்னதே.....
வாழும் காலம் வரை
வீசும் காதல் மழை
நாளும் வேண்டும் என்றதே....
போதும் போதும் பெண்ணே
உன்னால் என்னுள் ஆயிரம்
தோன்றுதே....
பாதை மறந்தே....
பயணங்கள் தொடர்ந்தே....
என்னை இழந்தே...
உனை அடைந்தே னோ........
காதல் கலந்தே
காற்றினில் தொலைந்தே
கானல் கனவே
கலையாதே நீ.....
Written by: Tamizh & Afzal
instagramSharePathic_arrow_out

Loading...