Kredyty
PERFORMING ARTISTS
K. J. Yesudas
Vocals
Nirmala Seshadri
Vocals
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Vairamuthu
Lyrics
Tekst Utworu
(தந்த ந நே)
த ந நே
(ஆனந்தமே)
(தந்த ந நே)
த ந நே
(ஆனந்தமே)
(தந்த ந நே)
த ந நே
(ஆனந்தமே)
(தந்த ந நே)
த ந நே
(ஆனந்தமே)
பச்சை கிளிகள் தோளோடு
பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சை கிளிகள் தோளோடு
பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு
அட சின்ன சின்ன அன்பில் தானே
ஜீவன் இன்னும் இருக்கு
பட்டம் பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு
அட பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு
பச்சை கிளிகள் தோளோடு
பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
அந்த விண்ணில் ஆனந்தம்
இந்த மண்ணில் ஆனந்தம்
அடிய பூமி பந்தை முட்டி வந்த
புல்லில் ஆனந்தம்
வெயிலின் சுத்தம் ஆனந்தம்
மழையின் சத்தம் ஆனந்தம்
அட மழையில் கூட சாயம் போகா
வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம்
வாழ்வே பேரானந்தம்
பெண்ணே, நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்
பச்சை கிளிகள் தோளோடு
பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
உன் மூச்சில் நான் வாழ்ந்தால்
என் முதுமை ஆனந்தம்
நீ இன்னொரு பிறவியில் என்னை பெற்றால்
இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில்
உன் வெப்பம் ஆனந்தம்
என் காது வரைக்கும் கம்பளி போர்த்தும்
கருணை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம்
பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியாள்
பிறர்க்கழுதாள்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
பச்சை கிளிகள் தோளோடு
பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சை கிளிகள் தோளோடு
பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு
அட சின்ன சின்ன அன்பில் தானே
ஜீவன் இன்னும் இருக்கு
பட்டம் பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு
அட பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு
பச்சை கிளிகள் தோளோடு
பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
Written by: A. R. Rahman, Vaali, Vairamuthu

