Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
T. M. Soundararajan
Vocais principais
COMPOSIÇÃO E LETRA
K. V. Mahadevan
Composição
A. Maruthakasi
Composição
Letra
பொன்னு வெளையிற பூமியடா...
விவாசாயத்த பொறுப்பா கவனிச்சி செய்றோமடா...
உண்மையா உழைக்கிற நமக்கு...
எல்லா நன்மைகளும் நாடிவந்து கூடுதடா...
மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக் கண்ணு
மணப்பாற மாடுகட்டி...
மாயவரம் ஏறு பூட்டி...
மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக் கண்ணு
ஆத்தூரு கிச்சடி சம்பா
ஆத்தூரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி வெத வெதச்சி
ஆத்தூரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி வெத வெதச்சி
நாத்தப் பறிச்சி நட்டுப் போடு
சின்னக் கண்ணு
தண்ணிய ஏத்தம் புடிச்சி
எறச்சி போடு செல்லக் கண்ணு
நாத்தப் பறிச்சி நட்டுப் போடு
சின்னக் கண்ணு
தண்ணிய ஏத்தம் புடிச்சி
எறச்சி போடு செல்லக் கண்ணு
கருத நல்லா விளைய வச்சி
மருத ஜில்லா ஆள வச்சி...
கருத நல்லா விளைய வச்சி
மருத ஜில்லா ஆள வச்சி
அறுத்துப் போடு களத்து மேட்டுல
சின்னக் கண்ணு
நல்லா அடிச்சி தூத்தி
அளந்து போடு செல்லக் கண்ணு
என்ட்றா பல்ல காட்ற அட தண்ணிய சேந்து...
கருத நல்லா விளைய வச்சி
மருத ஜில்லா ஆள வச்சி
அறுத்துப் போடு களத்து மேட்டுல
சின்னக் கண்ணு
நல்லா அடிச்சி தூத்தி
அளந்து போடு செல்லக் கண்ணு
பொதியை ஏத்தி வண்டியிலே
பொள்ளாச்சி சந்தையிலே... ஆ...
பொதியை ஏத்தி வண்டியிலே
பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக் கண்ணு
நீயும் வித்து போட்டு பணத்த எண்ணு
செல்லக் கண்ணு
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக் கண்ணு
நீயும் வித்து போட்டு பணத்த எண்ணு
செல்லக் கண்ணு
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்து போடு
சின்னக் கண்ணு
உங்க அம்மா கையிலே கொடுத்து போடு
சின்னக் கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க
செல்லக் கண்ணு
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்து போடு
சின்னக் கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க
செல்லக் கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க
செல்லக் கண்ணு
மணப்பாற மாடுகட்டி...
மாயவரம் ஏறு பூட்டி...
மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக் கண்ணு
Written by: A. Maruthakasi, K. V. Mahadevan


