Créditos
INTERPRETAÇÃO
K. J. Yesudas
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Ilaiyaraaja
Composição
Kannadasan
Composição
Letra
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா?
கண்ணில் நீரோட்டமா?
அதை நான் பார்க்கவா?
மனம்தான் தாங்குமா?
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை
இங்கே நீயில்லையே கண்ணே நானும் இல்லை
வானம் இல்லை என்றால் மதியும் இல்லை
உந்தன் வார்த்தை இல்லை என்றால் கீதம் இல்லை
நீ வந்ததால் தானே பூ வந்தது
நீ வாடினால் வண்ண பூ வாடுமே
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்?
தாய் செய்ததே தவம் நாம் வந்தது
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அந்த தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
காலம் தனை நான் மாற வைப்பேன்
கண்ணே உன்னை நான் வாழ வைப்பேன்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா?
கண்ணில் நீரோட்டமா?
அதை நான் பார்க்கவா?
மனம்தான் தாங்குமா?
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
Written by: Ilaiyaraaja, Kannadasan