Créditos

INTERPRETAÇÃO
T. M. Soundararajan
T. M. Soundararajan
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Viswanathan - Ramamoorthy
Viswanathan - Ramamoorthy
Composição
Kannadasan
Kannadasan
Composição

Letra

ஏண் தம்பிக்கு இன்னைக்கு இங்கதான் கல்யாணங்களாம்
இந்த வேடிக்கையை எங்காயாவது கேள்விப்பட்டிருக்கீங்களா?
அண்ணணுக்கு தெரியாமலே தம்பி கல்யாணம் பண்ணிக்குறான் அது எப்படி?
அண்ணணாவவது தம்பியாவது போனே
பயித்தியம்போல தெரியுது
அண்ணணாவது தம்பியாவது
அண்ணணாவது தம்பியாவது
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே
தாயும் பிள்ளையும் ஆன போதிலும்
வாயும் வயிறும் வேறடா
சந்தை கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பது ஏதடா?
சொந்தம் என்பது ஏதடா?
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே
பெட்டைக் கோழிக்கு கட்டு சேவலை
கட்டி வைத்தவன் யாரடா?
அவை எட்டு குஞ்சுகள் பெத்தெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா?
சோறு போட்டவன் யாரடா?
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும்
வருந்தவில்லையே தாயடா
மனித சாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா
மனதினால் வந்த நோயடா
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா?
மதித்து வந்தவர் யாரடா?
பணத்தின் மீதுதான் பக்தி என்றபின்
பந்த பாசங்கள் ஏனடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா
அண்ணன் தம்பிகள் தானடா
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே
Written by: Kannadasan, Viswanathan - Ramamoorthy
instagramSharePathic_arrow_out

Loading...