Créditos
INTERPRETAÇÃO
Priyanka
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Radhan
Composição
Thamarai
Composição
Letra
[Verse 1]
அமுதங்களால் நிறைந்தேன், நான் இதழ்
அமுதங்களால் நிறைந்தேன்
குமுதங்களால் மலர்ந்தேன், நான் தினம்
குமுதங்களால் மலர்ந்தேன்
[Verse 2]
விழி இரண்டும் புதிது
இமை இரண்டும் புதிது
கனவுகளோ இனிது
கடைவதெல்லாம் அமுதம்
மரகத ராகங்கள்
மணி விழி தீபங்கள்
மரந்திடுமா நாம் கோலங்கள்
[Verse 3]
தன தோம் தனனன திரன
தன தீம் தீம் தனோம்
தன தோம் தனனன திரன
தன தீம் தீம் தனோம்
[Verse 4]
வீதியில் வீசிட கண்டேன்
சாமந்தி பூ வாசம்
காற்றில் மோதிற மாற்றம்
கல்யாண ஆவேசம்
காலங்கள் நேரங்கள் எல்லாம்
கடிகார கூப்பாடு
நீ வாங்கும் முத்தங்கள் வேண்டும்
பேர் ஆசை தீராது
வலிபது போல் தோன்றும்
இன்னி பாடு தான் எனும்
கனவுலகில் இல்ல சுகம்
[Verse 5]
அமுதங்களால் நிறைந்தேன், நான் இதழ்
அமுதங்களால் நிறைந்தேன்
[Verse 6]
பார்வை போகிற தூரம்
நீ இன்றி யார் வேண்டும்
பாவை ஊன் உயிர் எங்கும்
உன்னோடு ஒன்றாகும்
ஆகாயம் பார்க்கிறதென்று
மழை கொஞ்சி பேசாத
ஆடைக்கும் வேர்க்கிறதென்று
பனி காற்று வீசாதா
ஒரு கரை நீயாக
மறு கரை நானாக
கரை புரண்டே ஆறாகினோம்
[Verse 7]
அமுதங்களால் நிறைந்தேன், நான் இதழ்
அமுதங்களால் நிறைந்தேன்
குமுதங்களால் மலர்ந்தேன், நான் தினம்
குமுதங்களால் மலர்ந்தேன்
[Verse 8]
விழி இரண்டும் புதிது
இமை இரண்டும் புதிது
கனவுகளோ இனிது
கடைவதெல்லாம் அமுதம்
மரகத ராகங்கள்
மணி விழி தீபங்கள்
மரந்திடுமா நாம் கோலங்கள்
Written by: Radhan, Thamarai

