Créditos
INTERPRETAÇÃO
S.M. Arul
Programação
Dev Mathew
Interpretação
COMPOSIÇÃO E LETRA
JD Pandiyan
Composição
PRODUÇÃO E ENGENHARIA
FMPB
Produção
Letra
என் ஆடுகளைத் தேடி வந்தேன் உன்னிடம் கேட்கிறேன்
என் ஆடுகளைக் கண்டெடுக்க உன்னையே அழைக்கிறேன்
இவர்களிலும் அதிகமாய் நீ என்னை நேசிப்பாயா?
எது வரினும் சத்திய வழியில் சிலுவை சுமப்பாயா?
1. தொழுவத்தில் இல்லாத ஆடுகள்
எங்கும் சிதறி அலைகின்றதே
வழியறியாத என் ஜனம்
அனுதினமும் அழிகின்றாரே
இவர்களிலும் அதிகமாய் நேசிப்பாயா?
பக்தி வைராக்கியம் கொண்டவர்
சிலுவை செய்தியை அறியாதவர் (2) - என் ஆடுகளைத்
2. தாகம் இல்லாத கிறிஸ்தவரே
திருச்சபை எங்கும் நிறைந்தாரே
பாரமில்லாத ஊழியர்கள்
சுவிசேஷம் சொல்ல சென்றாரே
ஆதி அன்பை மறந்தாரவர்
பாதி வழியில் பின்திரும்பினார் (2) - என் ஆடுகள் (இவர்களிலும்)
3. ஜெபிக்க மறந்த ஜெப வீரர்கள்
ஒருவர் ஒருவராய் காணவில்லை
ஜெபிக்கும் செயல்வீரர் எங்கே சென்றார்
உலக வாழ்க்கைக்கே திரும்பி விட்டார்
ஆவி அபிஷேகம் இழந்திட்டாரே
பரிசுத்த வாழ்வை மறந்திட்டாரே (2) - என் ஆடுகள் (இவர்களிலும்
Written by: JD Pandiyan

