Top de canções de Sid Sriram
Créditos
PERFORMING ARTISTS
Sid Sriram
Performer
D. Imman
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
Composer
Mani Amuthavan
Songwriter
Letra
ஆலங்குருவிகளா
எங்க வாசல் வருவிகளா
ஆலங்குருவிகளா
வாழ சொல்லி தருவிகளா
அன்ப தேட எடுத்தோமே பிறவி
தங்கம் தேடி பறக்காதே குருவி
இது புரிஞ்சா
கையில் எட்டாத எட்டாத சந்தோசம் எல்லாம்
உன் வீட்டில் உக்காருமே
கண்ணு கொட்டமா கொட்டாம கொட்டாரம் போட்டு
திக்காடி முக்காடுமே
ஆலங்குருவிகளா
எங்க வாசல் வருவிகளா
ஆலங்குருவிகளா
வாழ சொல்லி தருவிகளா
நம்மோட முகத்து சாயலுல
முன்னவங்க வாழ்ந்த தடம் இருக்கு
எத்தனை பேரு வந்தாலும்
வாழ்ந்துகலாம் வாங்க இடம் இருக்கு
எல்லாமே வேணுங்குற உனக்கு
அதில் காக்காக்கும் குருவிக்கும் பங்கு இருக்கு
ஏதேதோ கோட்டை இங்கு இடிஞ்சு
அதன் மேல் இப்ப மரம்தானே முளைச்சு கிடக்கு
அரும்பும் எறும்பும் நம் சொந்தம்
திரும்பும் திசையெல்லாம் ஆனந்தம்
ஆலங்குருவிகளா
எங்க வாசல் வருவிகளா
ஆலங்குருவிகளா
வாழ சொல்லி தருவிகளா
ஒரு நாளும் மறக்காம நமக்கு
ஒளி வாரி எறைக்காதா கிழக்கு
இங்க பொறந்து யாரு வந்தாலும் இல்லேன்னு சொல்லாம பூமி
எல்லாருக்கும் எல்லாம் தரும்
இந்த சின்னூண்டு சின்னூண்டு பூச்சிக்குங்கூட
பூ பூத்து தேனா தரும்
ஆலங்குருவிகளா...
Written by: D. Imman, Mani Amuthavan