Créditos
PERFORMING ARTISTS
Sean Roldan
Performer
Vaikom Vijayalakshmi
Performer
Yugabharathi
Performer
Suriya
Actor
COMPOSITION & LYRICS
Sean Roldan
Composer
Yugabharathi
Lyrics
Letra
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு
எங்கே போனாலும்
உன் வானம் கண்ணோடு
எல்லை இங்கில்லை
வா காலம் நம்மோடு
மண்ணிலே ஈரம் உண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
உள்ளுறுதி காண்பது தான்
பூமியிலே உன் உயரம்
எண்ணம் செயல் ஆகிவிட்டால்
எல்லாமே தேடி வரும்
உண்மை வழி நீ நடந்தே
போவது தான் வாழ்வின் அறம்
அன்பின் கொடி ஏற்றி வைக்க
துணை சேரும் கோடி தரம்
தேடல் இல்லாத
உயிர் உண்டோ சொல்லம்மா
எல்லாம் உன்னுளே
அதை தேடு கண்ணம்மா
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு
Written by: Sean Roldan, Yugabharathi

