Créditos
PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Performer
Mano
Performer
K.S. Chithra
Performer
Mohan
Actor
Nadhiya Moidu
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Vaalee
Lyrics
Letra
சித்திரை மாதத்து நிலவு வருது
வழிவிடு வழிவிடு மேகமே வழிவிடு
மந்திர கானமும் மோகங்கள் தருது
விலகிடு விலகிடு நாணமே விலகிடு
மழை போல் வருவாய் எனக்காக
நிலம் போல் தவிப்பேன் அதற்காக
மழை போல் வருவாய் எனக்காக
நிலம் போல் தவிப்பேன் அதற்காக
சித்திரை மாதத்து நிலவு வருது
வழிவிடு வழிவிடு மேகமே வழிவிடு
நீரோடும் ஆறாக நீ ஆகும் போது
நான் தானே மீன் போல நீராடுவேன்
மீன் போல நீ வந்து நீராடும் போது
நான் தானே தாளாமல் போராடுவேன்
காயங்கள் ஏதும் ஆகாமலே
காலோடு காலும் கையோடு கையும் பின்னாதோ
காவல் தான் மீறாதோ ஆவல்
நீ என்னை கொஞ்ச பட்டும் படாமலே
ம்-ஹும்-ஹும்-ஹும்-ஹும்
தோகை மேனி வாடும்
சித்திரை மாதத்து நிலவு வருது
வழிவிடு வழிவிடு மேகமே வழிவிடு
மந்திர கானமும் மோகங்கள் தருது
விலகிடு விலகிடு நாணமே விலகிடு
(ஏ-எ-ஏ)
(லல-ல-லா)
(லல-லா)
(லல-ல-லா)
(லல-லா)
(லல-ல-லா)
(லல-லா)
(லல-ல-லா)
(லல-லா)
(ஓ-ஓ-ஓ)
ஊரெங்கும் ஓசைகள் ஓய்கின்ற நேரம்
ஆரம்பம் ஆகாதோ ஆராதனம்
நான் பாடும் ராகங்கள் ஒன்றல்ல நூறு
ஆனாலும் நீ தான் என் ஆரோகணம்
தாளங்கள் என்றும் மாறாமலே
பாவங்கள் யாவும் பாட்டோடு சேரும் நாள் தானோ
ஆதாரம் நீ தானோ அன்பே
ஆனந்தம் என்றும் சந்தம் கெடாமலே
ம்-ஹும்-ஹும்-ஹும்-ஹும்
காதல் கீதம் பாட
சித்திரை மாதத்து நிலவு வருது
வழிவிடு வழிவிடு மேகமே வழிவிடு
மந்திர கானமும் மோகங்கள் தருது
விலகிடு விலகிடு நாணமே விலகிடு
மழை போல் வருவேன் உனக்காக
நிலம் போல் தவிப்பேன் அதற்காக
மழை போல் வருவேன் உனக்காக
நிலம் போல் தவிப்பேன் அதற்காக
சித்திரை மாதத்து நிலவு வருது
வழிவிடு வழிவிடு மேகமே வழிவிடு
மந்திர கானமும் மோகங்கள் தருது
விலகிடு விலகிடு நாணமே விலகிடு
Written by: Ilaiyaraaja, Vaalee