Letra

ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு உறவுகள் கூடும் கிளிக்கூடு இந்த அன்பை போல வேறேது வார்த்தைகள் எல்லாம் போதாது எந்த ஊரில் வாழ்ந்திடும் போதும் பறவை சொந்த கூட்டை மறந்திடுமா எங்கு சென்று பூத்திடும் போதும் மரங்கள் வேரை விட்டுக் கொடுத்திடுமா வேறெங்கும் இல்லாத வேராரும் சொல்லாத இதிகாசம் இந்த பாசம் தான் ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு உறவுகள் கூடும் கிளிக்கூடு தானே நானே நானே தானே நானே நா தானே நானே நானே தானே நானே நா தேரோடும் வீதி அதில் மண் வாசம் வீசும் தாழ்வாரம் எங்கும் தினம் தேவாரம் தான் மூடாத வாசல் அது விருந்தோம்பல் பேசும் எந்நாளும் இங்கே அட சந்தோசம் தான் கண்ணீரை கண்கள் என்றும் பார்த்ததில்லை ஏன் மண்மீது சொர்க்கம் இது தான் அணில் ஆடும் முற்றத்தில் அன்பென்னும் ராகத்தில் மயிலாக துள்ளி ஆடிப்பாடு ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு உறவுகள் கூடும் கிளிக்கூடு பணம் காசு இல்லை பேரும் புகழ் கூட இல்லை எது இந்த மண்ணில் அட இன்பம் தரும் சொந்தங்கள் வந்து ஒரு சிரிப்பொன்று தந்தால் அது போதும் என்றும் இந்த வாழ்வே வரம் தந்தை சொல் வேதம் என்று போற்றும் பிள்ளைகள் வருங்கால விழுதல்லவா ஆகாயம் வீழ்ந்தாலும் பூலோகம் சாய்ந்தாலும் அன்பொன்றே நம்மை தாங்கும் நாலும் ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு உறவுகள் கூடும் கிளிக்கூடு தானே நானே நானே தானே நானே நா தானே நானே நானே தானே நானே நா
Writer(s): N Muthu Kumaran, Prakashkumar G. Venkate Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out