Создатели
ИСПОЛНИТЕЛИ
Haricharan
Исполнитель
МУЗЫКА И СЛОВА
K
Композитор
Yuga Bharathi
Автор песен
Слова
ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள
உன்னால கோர புல்லும் வானவில் தானே
தன்னால சாண கல்லும் சாமி கல்லா மாறி போச்சே பூந்தேனே
ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள
அப்போ நான் விடிஞ்ச பிறகும்
உறங்கி கிடப்பேன் கண்ண தொறக்காம
இப்போ நான் உறங்க மறந்து
நினச்சு கிடக்கேன் ஒன்னும் விளங்காம
ஒன்னோட பாத நானும் போகுறேன் மானே
கொத்தோட நீயும் என்ன பறிச்சு போக வாசமாகி போறேனே
சப்பாத்தி கள்ளி இப்போ
சம்பங்கி பூவ போல மனக்குறேன் மிதக்குறேன்
ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள
ம்ம்... ஏத்தாத விளக்கு திரியா
இருந்த பய நான் இப்போ கிழக்கானேன்
சேத்தோட கிடந்த பய
உன் சிரிப்ப அறிஞ்சு ரொம்ப மிடுக்காணேன்
எல்லாரும் பயந்து பேசும் ஆளும் நான்தானே
இப்போது எதிரி கூட புகழ்ந்து பேசும் சேதி நானும் கேட்டேனே
விட்டது ஈசல் இப்போ
வண்ணத்து பூச்சியாக பறக்குறேன் கலக்குறேன்
ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள
உன்னால கோர புல்லும் வானவில் தானே
தன்னால சாண கல்லும் சாமி கல்லா மாறி போச்சே பூந்தேனே
ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள
Written by: K, Yuga Bharathi