Слова

ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ சுமை தாங்கி சுமையானதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே ஒரு பெண் புறா... கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் தூக்கம் கண்ணச் சொக்குமே அது அந்தக் காலமே மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக் காலமே என் தேவனே ஓ தூக்கம் கொடு மீண்டும் அந்த வாழக்கைக் கொடு பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆற விடு ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ சுமை தாங்கி சுமையானதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே ஒரு பெண் புறா... கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி குஞ்சு மிதித்து இந்தக் கோழி நொந்ததே இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி ஆண்பிள்ளையோ சாகும் வரை பெண்பிள்ளையோ போகும் வரை விழியிரண்டும் காயும் வரை அழுதுவிட்டேன் ஆனவரை ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ சுமை தாங்கி சுமையானதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே ஒரு பெண் புறா...
Writer(s): Deva, Vairamuthu Ramasamy Thevar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out