Создатели
ИСПОЛНИТЕЛИ
Sanjit Lucksman
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Harris Jayaraj
Композитор
Rohini
Автор песен
Слова
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா?
சிறுக சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா?
சொல்லா சொல்லும் என்னை
வாட்டும், ரணமும் தேனல்லவா?
மின்னும் பனி சாரல்
உன் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்து கொண்டாளே
வெண்ணிலா தூவி
தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா?
உன் வானவில்லா?
பொன் மான் இவளா?
உன் வானவில்லா?
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா?
மின்னும் பனி சாரல்
உன் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்து கொண்டாளே
வெண்ணிலா தூவி
தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா?
உன் வானவில்லா?
பொன் மான் இவளா?
உன் வானவில்லா?
ஆஆஆ
Written by: Harris Jayaraj, Rohini

