Создатели
ИСПОЛНИТЕЛИ
K. K. Mahalakshmi
Ведущий вокал
Pop Shalini
Исполнитель
Pa. Vijay
Исполнитель
Vinay Rai
Актер/актриса
МУЗЫКА И СЛОВА
Pa. Vijay
Автор песен
Harris Jayaraj
Композитор
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
Harris Jayaraj
Продюсер
Слова
முதல்நாள் இன்று,எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனலேற்றலாம்
என் உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லிக் கற்றுக்கொண்டது
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா
ஓஹோ जाने जान
முதல்நாள் இன்று,எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனலேற்றலாம்
திசைதோறும் கூறுகின்ற உண்மை
குளிர்போலே காதல் மிக மென்மை
தீண்டுகையில் தித்திக்காதோ சொல் உள்ளம்
முழுதாக மூழ்கியதும் இல்லை
மூழ்காமல் மிதந்ததும் இல்லை
காதல்கடல் விழுந்தவர் காணும் நிலை
ஓஹோ... வெகுதூரம் வந்தேன்
காதல் கிருமிகள் நெருங்காமல்
முதல்நாள் இன்று,எதுவோ ஒன்று
லேசாக எனை மாற்றலாம்
அங்கங்கு அனலேற்றலாம்
இளம்நெஞ்சில் காதல்விதை தூவு
இல்லையேல் நீ தன்னந்தனித் தீவு
வாழ்க்கை ஒரு சுமையாகாதோ சொல்லு ஹோ
உதட்டாலே காதலெனும் சொல்லை
உரைத்தாலே கூட வரும் தொல்லை
வாழும்மட்டும் விழிகளின் தூக்கம் கெடும்
சுகமேது வாழ்வில்,காதல் வலியை சுமக்காமல்
முதல்நாள் இன்று,எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனலேற்றலாம்
உப்புக்கல் வைரம் என்றுதான்
காட்டிடும் காதல் ஒன்றுதான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம்
ஓஹோ गोरिये... ஓசனா சோனா... ஓசனா சோனா... ஓசனா சோனா... ஓசனா சோனா...
Written by: Bharadwaj, Harris Jayaraj, Pa. Vijay

