album cover
Yaar Intha
28,275
Tamil
Yaar Intha was released on August 27, 2010 by Think Music as a part of the album Boss n' Baskaran (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Release DateAugust 27, 2010
LabelThink Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM109

Credits

PERFORMING ARTISTS
Haricharan
Haricharan
Performer
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Na Muthukumar
Na Muthukumar
Songwriter

Lyrics

[Chorus]
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள்
ஏதோ கேட்கிறாள்
எங்கும் இருக்கிறாள் ஓ
கண்ணால் சிரிக்கிறாள்
முன்னால் நடக்கிறாள்
நெஞ்சை கிழிக்கிறாள் ஓ
[Chorus]
கூட்டத்தில் இருந்தும்
தனியாகத் தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த
பூவாகத் திரிந்தாள்
என்னை ஏதோ செய்தாள்!
[Chorus]
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்
தன்னாலே ஓ
[Verse 1]
என் வீட்டு முற்றத்தில்
இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்பேன்
அணில் ஆடும் கூடத்தில்
இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்ப்பேன்
கண்ணாடி வளையலை போல
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
[Verse 2]
கால் தீண்டும் கொலுசில்
என்னோட மனச சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்
காதோடு தவழும்
கம்மல் போல் கிடப்பேன்
கன்னத்தை உரசி
என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தாள்!
[Chorus]
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
[Verse 3]
நான் கொஞ்சம் பார்த்தால்
எங்கேயோ பார்ப்பாள்
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்
எனை பார்த்து சிரிப்பாள்
நான் பார்த்தால் மறைப்பாள்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்
பெண் நெஞ்சம் புதிரதை போல
எப்போதும் யாரும் அறிந்ததே இல்லை
[Verse 4]
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிப்பதே இல்லை
மனம் நொந்தப் பிறகே
முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்றப் பிறகே
குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தாள்!
[Chorus]
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள்
ஏதோ கேட்கிறாள்
எங்கும் இருக்கிறாள் ஓ
கண்ணால் சிரிக்கிறாள்
முன்னால் நடக்கிறாள்
நெஞ்சை கிழிக்கிறாள் ஓ
கூட்டத்தில் இருந்தும்
தனியாகத் தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த
பூவாகத் திரிந்தாள்
என்னை ஏதோ செய்தாள்
Written by: Na Muthukumar, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...