Lyrics
கண்ணோடு இமைசேர்ந்த பந்தம்
அம்மா நீ என்னோடு நாளும்
தாகம் தீராதே அம்மா என்சொல்லில்
தாகம் தீராதே அம்மா என்சொல்லில்
கண்ணோடு இமைசேர்ந்த பந்தம்
அம்மா நீ என்னோடு நாளும்
வான் வரை பறந்தாலும்
உன் காலடி என் கூடு
அதற்குமுன்னே இணையாகுமோ
வேறெதுவும்
வான் வரை பறந்தாலும்
உன் காலடி என் கூடு
அதற்குமுன்னே இணையாகுமோ
வேறெதுவும்
காலத்தால் அழியாதது
என்றென்றும் நிலையானது
தாய்மையின் பாசம் ஒன்றுதான்
அதில் மாற்றங்கள் ஏதும் கிடையாது
கண்ணோடு இமைசேர்ந்த பந்தம்
அம்மா நீ என்னோடு நாளும்
தேன்மழை இசைக்கின்றேன்
தாயே உன் புகழ் பாடுகிறேன்
என் குரலில் இனிப்பதெல்லாம்
உன் சரிதம்
தேன்மழை இசைக்கின்றேன்
தாயே உன் புகழ் பாடுகிறேன்
என் குரலில் இனிப்பதெல்லாம்
உன் சரிதம்
என் உயிர் உனதாகுமே
நாள்தோறும் துதி பாடுமே
உந்தன் ஆசையே இறுக்கவே
எனக்கேதம்மா கலக்கம் நெஞ்சோடு
கண்ணோடு இமைசேர்ந்த பந்தம்
அம்மா நீ என்னோடு நாளும்
தாகம் தீராதே அம்மா என்சொல்லில்
தாகம் தீராதே அம்மா என்சொல்லில்
Written by: Ku.venugopal